Google Launches Spam Detection Feature : கூகுள் போலி அழைப்புகளை தடுக்க ஸ்பேம் டிடெக்ஷன் வசதியை அறிமுகம் செய்துள்ளது

உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் கூகுளில் அடிக்கடி புதிய தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் போலி அழைப்புகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் ஸ்பேம் டிடெக்ஷன் (Spam Detection) வசதியை (Google Launches Spam Detection Feature) அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்பேம் டிடெக்ஷன் வசதியின் மூலம் முன்கூட்டியே போலி அழைப்புகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.          

கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த ஸ்பேம் டிடெக்ஷன் வசதியை உங்கள் மொபைல் போனில் (Google Launches Spam Detection Feature) ஒருமுறை எனேபிள் செய்துவிட்டால் போதும் போலி அழைப்புகள் வரும்போது மொபைல் போன் Vibration ஒலியை எழுப்பும் எனவும் அதேபோல் Likely Scam என போனின் திரையில் தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மொபைல் போனில் இந்த ஸ்பேம் டிடெக்ஷன் வசதியை எனேபிள் செய்வது எப்படி என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ஸ்பேம் டிடெக்ஷன் வசதியை எப்படி பயன்படுத்துவது

உங்கள் மொபைல் போனில் இந்த ஸ்பேம் டிடெக்ஷன் வசதி Default-ஆக ஆஃப் செய்யப்பட்டிருக்கும். உங்கள் போனில் உள்ள Setting-கிற்கு சென்று எனேபிள் (Enable) செய்ய வேண்டும். தற்போது இந்த புதிய வசதியானது (Google Launches Spam Detection Feature) கூகிள் பிக்சல் ஸ்மார்ட்போனில் (Google Pixel Smartphone) மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.      

டெலிகாம் நிறுவனங்கள் இந்த ஸ்பேம் அழைப்புகளை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. இதில் முதல் கட்டமாக ஏர்டெல் (Airtel) நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு நெட்வொர்க் அடிப்படையில் AI (Artificial Intelligence) ஆற்றல் பெற்ற போலி அழைப்புகளை கண்டறிதல் தீர்வை அறிமுகம் செய்தது. ஆனால் இது ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே போலி அழைப்புகளால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும். மேலும் தற்போது கூகுள் நிறுவனம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஸ்பேம் டிடெக்ஷன் (Spam Detection) வசதியை (Google Launches Spam Detection Feature) அறிமுகம் செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply