Google Maps Features : கூகுள் மேப்பின் பல்வேறு சிறப்பம்சங்கள்

பலரும் அறியாத Google Map செயலியின் பல சிறப்பு அம்சங்களை (Google Maps Features) குறித்து இப்போது விரிவாக பார்க்கலாம்.

கூகுள் மேப் சிறப்பு அம்சங்கள் (Google Maps Features)

கூகுள் அறிமுகப்படுத்திய பல்வேறு சேவைகளில் கூகுள் மேப் ஆப் மிகவும் பிரபலமானது. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தினாலும் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த செயலியை முழுமையாக பயன்படுத்துவதில்லை. இந்த பயன்பாட்டில் பல அம்சங்கள் உள்ளன. இந்நிலையில் பலருக்கும் தெரியாத கூகுள் மேப் (Google Maps Features) செயலியின் பல சுவாரசியமான சிறப்பு அம்சங்களை தற்போது காணலாம்.

வணிக நிறுவனங்களின் தகவல்களை அறிவதற்கு

வணிக நிறுவனம் பற்றிய விரிவான தகவல்களை அணுகுவதற்கான சாத்தியமான வழிகளுக்கு உதவுகிறது. உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டண முறை மற்றும் வாடிக்கையாளர்கள் ஆதரவு நிலைகள் ஆகியவற்றைப் பற்றியும் (Google Maps Features) அறிந்து கொள்ளலாம்.

வீட்டில் இருந்தபடியே சாலையில் நடக்க

வரைபடத்தின் கீழே உள்ள பெக்மேன் லோகோவை வரைபடத்தில் இழுத்தால், சாலையில் நடந்து செல்வது போன்ற அனுபவத்தை உணரலாம்.

விமான டிக்கெட்

எந்த இடத்திற்கும் விமான டிக்கெட் விலைகளை எளிதாகக் கண்டறியலாம். விமான போக்குவரத்து அட்டவணைகள், விமான நிறுவனங்கள், இணைப்புகள் மற்றும் கட்டணங்கள் என பலவற்றைக் காட்டும் (Google Maps Features) வரைபடங்களுடன் உங்கள் பயணங்களை எளிதாகத் திட்டமிடுகிறது.

மின்சார வாகனம் சார்ஜிங்

மின்சார வாகனங்கள் வைத்திருப்பவரா நீங்கள் உங்கள் அருகில் உள்ள எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை கண்டறிவதற்கு கூகுள் மேப்  பயன்படுகிறது.  

லென்ஸ்

ஆக்மென்ட்டட் ரியாலிட்டி மற்றும் AI பயன்படுத்தி மேப்பில் உள்ள லென்ஸ் நாம் இருக்கக்கூடிய சுற்றுப்புறத்தைப் பற்றிய உடனடி தகவல்களை நமக்கு வழங்குகிறது.

கான்வர்சேஷன் சர்ச்

நம்முடைய கேள்விகளுக்கு ஏற்ப ஸ்மார்ட் பரிந்துரைகளை வழங்கும் AI ஆனது இயங்கு அரட்டை மூலம் புதிய இடங்களை கண்டறிவதற்கு உதவுகிறது.

நிகழ்நேர போக்குவரத்து தகவல்களை பெற

கூகுள் மேப் செயலி ஆனது நிகழ்நேர  புதுப்பிப்புகளை வழங்குகிறது. மேலும் திட்டமிட்டபடி எதிர்கால போக்குவரத்து நிலைகளை சரிபார்க்கவும் அனுமதிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply