Google Messages Spam Protection: Google message app-பில் Spam-மை குறைக்க ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Google Messages Spam Protection: SMS வழியாக உரையாடல் செய்யும் பழக்கமெல்லாம் மாறி விட்டாலும் கூட,அந்த இடத்தை Whatsapp ஆக்கிரமித்து விட்டாலும் கூட, இன்னமும் ஒவ்வொரு Android Smart Phone-னிலும் Google Messages- தான் பிரதான  Messaging app ஆக உள்ளது. Aadhar, Pan உட்பட அரசாங்க ஆவணங்கள் முதல் Post office, Bank accounts வரையிலாக OTP போன்ற தனிப்பட்ட Messages வந்துசேரும் இடமாக Google Message உள்ளது. இப்படிப்பட்ட  முக்கியத்துவம் வாய்ந்த Google Message app-ப்பில்  spam-மை குறைக்கும் நோக்கத்தின் கீழ் ஒரு புதிய அம்சம் ஆனது    அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Google-ளின் இந்த புதிய அம்சமானது, மோசடி செய்பவர்கள் மற்றும் ஹேக்கர்கள் வழியாக போலியான லிங்க்குகளுடன் வரும் Message-களை, பயனர்கள் திறக்கும் முன்பே மோசடி Message குறித்து எச்சரிக்கை கொடுக்கும். “இந்த  Message-ஜை அனுப்பியவர் உங்கள் Contact List-டில் இல்லை”, “உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் link-க்குகளை கிளிக் செய்தால். அதனுள் தேவை இல்லாத அல்லது ஆபத்தான content  இருக்கலாம்” என்று எச்சரிக்கைகளை கொடுக்கும்.

ஒருவேளை  Google தரும் இந்த எச்சரிக்கையை நாம் மீற விரும்பினால் மற்றும் தெரியாத எண்ணில் இருந்து வரும்  Message-ஜை open செய்ய அல்லது அதில் உள்ள link-ஐ கிளிக் செய்ய விரும்பின்னால்.. “சாத்தியமான ஆபத்து என்று தெரிந்தும் இதை நான் செய்ய விரும்புகிறேன்” என்கிற checkbox-ஸை நாம் கடக்க வேண்டியிருக்கும். கூகுள் மெசேஜஸ் ஆப்பில் போலியான மற்றும் ஸ்பேம் மெசேஜ்களுக்கு எதிராக கடுமையான பாதுகாப்பு செயல்முறைகள் கொண்டுவரப்படவுள்ளது.

Google Messages Spam Protection: பல நிறுவனங்கள் Google-ளுக்கு எதிராக வேலை

பல நிறுவனங்கள்  Google-ளுக்கு எதிராக வேலை செய்கின்றன. OpenAI நிறுவனமானது சில தினங்களுக்கு முன்னர் அதன் AI-powered சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்த இனிமேல் அக்கவுண்ட் தேவை இல்லை, லாக்-இன் செய்ய தேவையில்லை என்று அறிவித்து இருந்தது.

185 நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சாட்ஜிபிடி-ஐ இனிமேல் அக்கவுண்ட் இல்லமால் அணுகலாம் என்கிற  இந்த அறிவிப்பானது,  Google  நிறுவனத்தின் Gemini AI-க்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை ஆகும்.

இதன் மூலம் ஜெனெரேட்டிவ் AI சாட்பாட்களை இன்னும் எளிமையாக அணுக முடியும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக Tesla, SpaceX மற்றும் X ஆகிய நிறுவனங்களின் சொந்தக்காரர் ஆன Elon Musk தனது சொந்த AI சாட்பாட் ஆன  Grok 2 AI தற்போது பயிற்சியில் இருப்பதாகவும், அது பொது வெளிக்கு வரும்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிவிடும் என்று கூறி உள்ளார்.

மேலும் Open Source ஆக்கப்பட்டுள்ள Grok AI 1.5 Version ஆனது கூடிய விரைவில் X (ட்விட்டர்) தளத்தில் அணுக கிடைக்கும். ஒட்டுமொத்தமாக Google-ளின் ஜெமினி  AI-க்கும், ஓப்பன்  AI-யின் சாட்ஜிபிடி-க்கும் போட்டியாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் Elon Musk செய்து வருகிறார்.

Latest Slideshows

Leave a Reply