Google New Policy To Delete Inactive Accounts : கூகுள் (Google) நிறுவனத்தின் டெலிட் பாலிசி...

Google New Policy To Delete Inactive Accounts :

Google New Policy To Delete Inactive Accounts : கூகுள் (Google) நிறுவனத்தின் தற்போதிய டெலிட் பாலிசியின் கீழ் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்கள் (Inactive Gmail Accounts) நிரந்தரமாக கூகுளில் இருந்து டெலிட் செய்யப்பட உள்ளன. ஆகவே, உங்களுடைய அக்கவுண்ட் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் சுமார் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட்டை லாகின் (Login) செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், வங்கி சேவைகள் என தொடங்கி ஆதார் கார்டு (Aadhar Card) சேவைகள் வரை ஜிமெயில் அக்கவுண்ட் கட்டாயமாக தேவைப்படுகிறது. இதனால், அதைப்பற்றி முழுமையான தகவல்கள் தெரியாத மக்களும் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

ஜிமெயில் அக்கவுண்ட் தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்திவிட்டு, அதன் பின்பு இதனை பல கோடி பேர் கிடப்பில் போட்டு விடுகின்றனர். இதனாலேயே, பெரும்பாலும் ஜிமெயில் அக்கவுண்ட் என்ற ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கூட நியாபகம் இருக்காது. இது போன்ற செயல் நமக்கு சாதாரணமாக தோன்றலாம்.

ஆனால், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் ஜிமெயில் அக்கவுண்ட்களை பராமரிக்கும் கூகுள் நிறுவனத்துக்கு பயன்படுத்தாத அக்கவுண்ட்கள் மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பதே உண்மை. இதனால், கூகுள் நிறுவனம் தற்போது புதிய அக்கவுண்ட் பாலிசி ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த பாலிசியின்படி 2 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்கள் நிரந்தரமாக டெலிட் (Google New Policy To Delete Inactive Accounts) செய்ய கூகுள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த புதிய டெலிட் பாலிசியின்படி ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் யூடியூப் (YouTube), கூகுள் போட்டோஸ் (Google Photos), காலண்டர் (Calendar) மற்றும் டிரைவ் (Drive) ஆகிய அனைத்து அக்கவுண்ட்களும் கூகுளில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படும். இதனால், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் போட்டோக்கள், தரவுகள், வீடியோக்கள் மீண்டும் கிடைக்காமலேயே போக வாய்ப்புள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் செய்யும் பணிகள் (Google New Policy To Delete Inactive Accounts) இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்தே தொடங்கப்படுகின்றன. ஆகவே, இன்னும் நிறைய கால அவசாகம் இருக்கிறது. இந்த இடைவெளியில் 24 மாதங்களும் மேலாக கூகுள் ஜிமெயில் அக்கவுண்ட்டை யாராவது பயன்படுத்தாமல் இருந்தால், உடனே பயன்படுத்த தொடங்குங்கள்.

Google New Policy To Delete Inactive Accounts : இதுபோன்று யாரேனும் ஜிமெயில் அக்கவுண்ட்டை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கூகுள் நிறுவனத்தின் இன்ஆக்டிவ் பாலிசியின் (Inactive Google Account Policy) படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது, நீங்கள் அதை பயன்படுத்திருக்க வேண்டும். இதில், ஜிமெயில் அக்கவுண்ட்டை ஒருமுறையாவது லாகின் செய்வது, இமெயில் அனுப்புவது மற்றும் பெறுவது உள்ளிட்டவை அடங்கும்.

இப்படி செய்ய நீங்கள் மறந்து விடாதீர்கள். அதே போல, வரும் காலங்களிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது ஜிமெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஜிமெயில் மட்டுமல்லாமல், அதன் மூலம் பயன்படுத்தும், மீட் (Meet) டாக்ஸ் (Docs), டிரைவ், யூடியூப், கூகுள் போட்டோஸ், காலண்டர், போன்ற ஆப்களையும் குறிப்பிட்ட இடைவெளியில் லாகின் செய்து லாக் அவுட் செய்யும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு ஜிமெயில் அக்கவுண்ட் தேவைப்படவில்லை என்றால், அதில் இருக்கும் தரவுகளை பேக்கப் (Backup) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அவை திரும்ப கிடைப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்ஆக்டிவ் கூகுள் அக்கவுண்ட் பாலிசியின் (Inactive Google Account Policy) கீழ் டெலிட் செய்த ஜிமெயில் அக்கவுண்ட்டின் ஐடி போன்று மீண்டும் யாராலும் உருவாக்க முடியாது.

இப்படி பல்வேறு சிக்கல்கள் புதிய டெலிட் பாலிசியில் இருக்கிறது. ஆகவே, ஜிமெயில் அக்கவுண்ட்டை மீண்டும் பயன்படுத்துவது மட்டுமே நல்லது. ஒருவேளை நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை மறந்திருக்கும் பட்சத்தில், ஜிமெயிலை ஓப்பன் செய்யும்போது, கீழே தோன்றும் ஃபர்கெட் இமெயில் (Forget Email) என்ற டேபை கிளிக் செய்து முதலில் ஜிமெயில் ஐடியை ரெக்கவரி (Recovery) செய்து அதன்பின்பு அதை வைத்து ஃபர்கெட் பாஸ்வேர்ட் (Forget Password) வை கொடுத்து பாஸ்வேர்ட்டையும் ரெக்கவரி செய்து கொள்ளுங்கள்.

Latest Slideshows

Leave a Reply