Google Pixel 8 Pro: iPhone 15 க்கு போட்டியாக களமிறங்குகிறது Google Pixel 8 மற்றும் 8 Pro ...!

Google நிறுவனத்தின் Google Pixel 8 மற்றும் Google Pixel 8 Pro ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Android 14 உடன் Google pixel 8 மற்றும் iOS 17 உடன் iPhone 15 என அடுத்தடுத்து பிரபலமான மொபைல் நிறுவனங்களின் மொபைல்கள் டெக் உலகில் களமிறங்க உள்ளன.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மவுசு அதிகம். அந்த வகையில் ப்ரீமியம் செக்மெண்டில் ஐபோன்களுக்கு போட்டியாக இதன் கூகுள் பிக்சல் சீரிஸ்கள் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த வரவேற்பை தொடர்ந்து கூகுள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ்களுக்கு போட்டியாக அக்டோபர் 4-ம் தேதி Google Pixel 8 மற்றும் Pixel 8 Pro ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யபடவுள்ளது.

Google Pixel 8 சிறப்பம்சம்

முதலில் பிக்சல் 8 மாடலை பொறுத்தவரை 6.17 இன்ச் 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. மற்றும் கூடுதலாக 2400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் வருகிறது. மேலும் கூகுளின் பிரத்யேக டென்சர் ஜி3 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வருடங்களுக்கான OS அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. . இதோடு 50MB வைடு ஆங்கிள் லென்ஸ் 48MB ஆட்டோ போகஸ் லென்ஸ் மற்றும் 48MB டெலிபோட்டோ லென்ஸ் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு 10.8 MB கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 8 வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களிலும் கிடைக்கலாம். இது 24W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,485mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Pixel 8 Pro சிறப்பம்சம்

பிக்சல் 8 ப்ரோ மாடலை பொறுத்தவரை, ஸ்டோரேஜுக்கு 12GB RAM மற்றும் 256GB/1டிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 23 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5050 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் ஐபி68 ரேட்டிங் கொண்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

Latest Slideshows

Leave a Reply