Google Warning : உடனே டெலிட் செய்யவும்! ஆபத்தான 22 ஆப்கள்!
Google Warning :
எல்லா மொபைல் போனும் நல்லாத்தான் இருக்கு. இருந்தாலும் மொபைல் பேட்டரியும் டேட்டாவும், எங்க போகுது? எப்படிபோகுதுன்னே தான் நமக்கு தெரியல. இந்த இரண்டுமே டக்குனு காலி ஆகிடுது? என்று புலம்பும் ஆயிரக்கணக்கான ஸ்மார்ட்போன் பயனர்களில் நீங்களும் ஒருவரென்றால் கூகுள் (Google) நிறுவனத்தின் இன்றை எச்சரிக்கை (Google Warning) உங்களுக்கானதாக கூட இருக்கலாம்!
கூகுள் நிறுவனம் : ஸ்மார்ட்போன்களுக்கு தீங்கிழைக்கும் திறன்களை கொண்ட 22 ஆண்ட்ராய்டு ஆப்களை (22 Android Apps) தனது பிளே ஸ்டோரில் (Play Store) இருந்து தற்போது நீக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக மெக்காஃபி (McAfee) பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், புகாரளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 22 ஆப்களும் கண்டுபிடிக்கப்பட்டு, பிளே ஸ்டோரிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன.
Google Warning : இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மொத்தம் 2.5 மில்லியன் டவுன்லோட்ஸ்களை (2.5 Million Downloads) இந்த 22 ஆப்களும் பெற்றுள்ளது. மேலும் தீங்கிழைக்கும் திறன் கொண்ட இந்த 22 ஆப்களும் பல லட்சக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நாள்தோறும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்த தீங்கிழைக்கும் 22 ஆப்களில் நீங்கள் ஏதேனும் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட அதை உடனே அன்இன்ஸ்டால் அல்லது டெலிட் ( Uninstall Or Delete ) செய்யுமாறு தற்போது கூகிள் (Google ) நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஏனென்றால் இந்த 22 ஆப்கள், பயன்படுத்தப்படாத நிலையிலும் கூட விளம்பரங்களை இயக்கும் திறனை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் மொபைல் டேட்டா விரைவாக தீர்ந்துபோவது மட்டுமின்றி, உங்கள் மொபைல் போனின் பேட்டரி லைஃப்பும் கூட குறையும். மேலும் உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவானது அன்லாக் செய்யப்பட்டு இருந்தாலும் கூட இந்த ஆபத்தான 22 ஆப்களும், மொபைல் டேட்டாவை பயன்படுத்துவதை நிறுத்தாது என்றும் பாதுகாப்புதுறை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த 22 ஆப்களும் கூகுள் (Google) நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டுவிட்டன. இருப்பினும் ஆபத்தான இந்த 22 ஆப்களை ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பயனர்கள் இவைகளை உடனடியாக நீக்க வேண்டும். உங்களுடைய ஆண்ட்ராய்டு போனில் இருந்து உடனடியாக நீக்க வேண்டிய ஆபத்தான ஆப்களின் பட்டியல் இதோ.
Google Warning – ஆபத்தான 22 ஆப்களின் பட்டியல் :
(1) பரோ டிவி (Barro TV)
(2) டிஎம்பி ஆப் (DMB App)
(3) ஜிஹோசாஃப்ட் மொபைல் ரெக்கவரி ஆப் (Geosoft Mobile Recovery App)
(4) மியூசிக் டவுன்லோடர் (Music Downloader)
(5) மியூசிக் படா (Music Bada)
(6) பரோ (Barro)
(7) பரோ கொரியன் டிவி (Barro Kurian TV)
(8) நியூலைவ் (New Live)
(9) பரோ டிஜிட்டல்
(10) ரிங்டோன்ஸ் ப்ரீ ம்யூசிக் (Ringtones Free Music)
(11) ஆல்பிளேயர் (ALLPlayer):
(12) கம்ஆன்ஏர் (Com’ONAIR)
(13) வாட்ச் ரியல் டைம் டிவி டிஎம்பி (Watch realtime TV DMB)
(14) லைவ்பிளே (Liveplay)
(15) ஸ்ட்ரீம்கார் லைவ் ஸ்ட்ரீமிங் (StreamKar Live Streaming)
(16) ஆன்ஏர் ஏர்லைன் மேனேஜர் (OnAir Airline Manager)
(17) எம்மியூசிக் (MMusic)
(18) பப்ஜி மொபைல் கேஆர் (PUBG Mobile KR)
(19) ஆடியோ ப்ளேயர் – மியூசிக் ப்ளேயர் ( Audio Player – Music Player )
(20) ஏடி பிளேயர் (AT Player)
(21) ஃப்ரீ டிராட் மியூசிக் ப்ளேயர் – டிராட் மியூசிக் பாக்ஸ் ( Free Trot Music Player – Trot Music Box)
(22) கம்போஸ் மியூசிக் வித் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (Compose music with instruments)
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்