Google's Most Searched Movies 2023 : 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல்

ரஜினி, விஜய்யை முந்திய அட்லியின் ‘ஜவான்’ :

இந்திய அளவில் கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் (Google’s Most Searched Movies 2023) ஆனது வெளியாகியுள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்கள் (Google’s Most Searched Movies 2023) பட்டியலில் ரஜினியின் ’ஜெயிலர்’, விஜய்யின் ’லியோ’ படங்களை விட அட்லியின் ’ஜவான்’ படம் மிகவும் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google's Most Searched Movies 2023 - அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலின் விவரங்கள் :

  • ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் முதலிடத்தில் உள்ளது.
  • பாலிவுட் நடிகர் சன்னி லியோன் நடித்த ‘கடார் 2’ படம் 2-வது இடத்தில் உள்ளது.
  • கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘ஓபன் ஹெய்மர்’ படம் 3-வது இடத்தில் உள்ளது.
  • மிகப்பெரிய தோல்வி அடைந்த பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கூகுளில் தேடப்பட்ட பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
  • ஷாருக்கானின் இந்த ஆண்டு வெளியான இன்னொரு வெற்றி படமான ‘பதான்’ ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த சர்ச்சைக்குரிய படமான ‘தி கேரளா ஸ்டோரி’ ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ’ஜெயிலர்’ திரைப்படம் ஏழாவது இடத்தில் உள்ளது.
  • தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் ஆனது எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • சல்மான்கான் நடித்த ’டைகர்’ திரைப்படம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
  • தளபதி விஜய்யின் ’வாரிசு’ திரைப்படம் ஆனது பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

ரஜினி ’ஜெயிலர்’, விஜய்யின் ’லியோ’ ’வாரிசு’ படங்களை விட அட்லியின் ‘ஜவான்’ படம் முதல் இடத்தில் உள்ளது (Google’s Most Searched Movies 2023) என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் விஜய், ஷாருக்கான் ஆகியோர்களின் இரண்டு படங்கள் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களாகவும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply