Govt Announced Bharat Ratna To 5 Persons : 5 நபர்களுக்கு பாரத ரத்னா வழங்குவதாக 29/03/2024 அன்று அறிவித்துள்ளது
Govt Announced Bharat Ratna To 5 Persons :
- இந்திய அரசு கர்பூரி தாக்கூர், லால் கிருஷ்ண அத்வானி, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், செளத்ரி சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு (Govt Announced Bharat Ratna To 5 Persons) பாரத ரத்னா வழங்குவதாக 29/03/2024 அன்று அறிவித்துள்ளது.
- பாரத ரத்னா என்பது இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருது ஆகும். இந்திய அரசாங்கம் 1954 ஆம் ஆண்டு நிறுவிய பாரத ரத்னா விருதானது மனித முயற்சியின் எந்தவொரு துறையிலும் விதிவிலக்கான சேவை அல்லது மிக உயர்ந்த வரிசையின் செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
- இந்த பாரத ரத்னா விருது கடைசியாக 2019 இல் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது, இந்த விருது 2020 முதல் 2023 வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. 2015, 2014, 2001, 1998, 1990, 1963 மற்றும் 1961 ஆண்டுகளில் இது இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது. 2019, 1997, 1992, 1991, 1955 மற்றும் 1954 ஆண்டுகளில் இது மூன்று நபர்களுக்கு வழங்கப்பட்டது.
- பிரதமர் பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரைகள் குடியரசுத் தலைவருக்கு வழங்குவார். எந்த பண மானியத்தையும் இந்த பாரத ரத்னா விருது கொண்டிருக்காது. குடியரசுத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மற்றும் ஒரு பதக்கம் வழங்கப்படும்.
- நாட்டின் ஆறாவது பிரதமராக பதவி வகித்தவர் விவசாயிகளின் பெரிய தலைவரான செளத்ரி சரண் சிங் ஆவார். நாட்டின் 10வது பிரதமராக பதவி வகித்தவர் பி.வி.நரசிம்மராவ். 1991 ஜூன் 21 முதல் 1996 மே 16 வரை பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், இந்தியப் பொருளாதாரத்தை உலகமயமாக்கலின் பாதையில் திருப்பியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் இந்தியாவில் பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
- விஞ்ஞானி சுவாமிநாதன் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலையை மாற்றி, வேளாண் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கியவர். இந்தியா தற்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் மிக முக்கியக் காரணம் ஆகும். விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானது. ஆயிரக்கணக்கான இளம் விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டியாக இருந்தவர்.
பாரத ரத்னா விருது பெற்ற பிரபலங்கள் :
ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், ஜாகீர் உசேன், லால் பகதூர் சாஸ்திரி, அபுல் கலாம் ஆசாத், இந்திரா காந்தி, கே.காமராஜ், அன்னை தெரசா, வினோபா பாவே, எம்.ஜி.ராமச்சந்திரன், பி.ஆர்.அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, ராஜீவ் காந்தி, வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், சத்யஜித் ரே, ஏபிஜே அப்துல் கலாம், ஜெயப்பிரகாஷ் நாராயண், அமர்த்தியா சென், சச்சின் டெண்டுல்கர், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மதன் மோகன் மாளவியா ஆகியோர் இந்த விருதை கடந்த காலங்களில் பெற்றுள்ளனர்.
Latest Slideshows
-
Ind vs SA 1st Test : 93 ரன்னில் சுருண்ட இந்தியா.. சொந்த மண்ணில் படுதோல்வி!
-
VARANASI Official Teaser : ''வாரணாசி'' படம் வெளியானால் நிச்சயம் இது நடக்கும்..
-
IPL 2025 Retention List: CSK அணியில் வெளியேறிய வீரர்கள் யார் யார்?
-
Kaantha Movie Box Office : 2 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
-
CSK Trade Players 2026 : CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!!!
-
Mudakathan Keerai Benefits In Tamil : முடக்கத்தான் கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்
-
Bank Of Baroda Recruitment 2025 : பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2700 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..! -
Kumki 2 Release Ban : கும்கி 2 படம் வெளியிட இடைக்காலத் தடை?
-
TNPSC Annual Planner 2026 : டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டு கால அட்டவணை எப்போது வெளியாகும் -
PNB Local Bank Officer : பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!