Govt Of India's 4 Women Investment Schemes : இந்திய அரசாங்கம் பெண்களுக்காக 4 முதலீட்டுத் திட்டங்களை தொடங்கியுள்ளது

இந்திய அரசாங்கம் ஆனது பெண்களின் நிதிப் பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை ஆதரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை (Govt Of India’s 4 Women Investment Schemes) வழங்கி வருகிறது. இந்தத் திட்டங்கள் சிறு சேமிப்பு விருப்பங்களிலிருந்து தொடங்கி கல்வி உதவித் திட்டங்கள் வரை உள்ளது. இந்த இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சிகள் ஆனது கல்வி, சுகாதாரம், தொழில்முனைவு மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளன.

Govt Of India's 4 Women Investment Schemes - இந்தியாவில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ள பெண்களுக்கான 4 முதலீட்டுத் திட்டங்களின் விவரங்கள் :

சுபத்ரா யோஜனா :

ஒடிசா மாநிலத்தில் 21 வயது முதல் 60 வயது வரை உள்ள தகுதியுள்ள பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில் சுபத்ரா யோஜனா திட்டத்தை ஒடிசா அரசு செப்டம்பர் 2-ம் தேதி அறிவித்தது. தகுதியுள்ள பெண்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 இரண்டு சம தவணைகளில் என ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.50,000 ஆனது வழங்கப்படும். இந்த நிதி நேரடியாக பயனாளி பெண்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். இந்த  பெண்களுக்கு சுபத்ரா டெபிட் கார்டும் வழங்கப்படும்.

மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா :

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிரா அரசு மஜ்ஹி லட்கி பஹின் யோஜனாவை அறிவித்தது. பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த திட்டம் மூலம் மாத உதவித்தொகையாக ரூ.1,500 ஆனது வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ஆனது ரூ.2.5 லட்சமாக இருக்க வேண்டும். 21-65 வயதுடைய திருமணமான, விவாகரத்து செய்யப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கும் இந்த மஜ்ஹி லட்கி பஹின் யோஜனாத் திட்டத்தின் பலன்கள் வழங்கப்படும்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் :

பெண்களிடம் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய ஒருமுறை சிறுசேமிப்பு முயற்சியாக 2023 ஆண்டில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. வயதைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு இந்தியப் பெண்ணும், இந்த திட்டத்தில் கணக்கைப் பதிவு செய்து முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு இளம் பெண் குழந்தைக்கு கணக்கைத் திறக்கலாம். ரூ.2 லட்சம் வரை இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யலாம் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் ஆனது மார்ச் 2025 வரை கிடைக்கும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா :

இளம் பெண்களின் கல்வி மற்றும் நலனுக்காகவும் சேமிப்பை மேம்படுத்துவதற்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு அரசாங்க ஆதரவுடன் கூடிய சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் அரசாங்கத்தின் “பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ” என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டது. 10 வயது வரையிலான பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்தத் திட்டத்தில் ஒரு கணக்கைத் திறக்கலாம். 

இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை ஆனது அதிக வட்டி விகிதத்தைப் பெறும். மேலும் இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகையும் பெற்றுத்தரும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை ஆனது பெண்ணுக்கு 21 வயதாகும் போது முதிர்ச்சியடைகிறது. இருந்த போதும், சிறுமிக்கு 18 வயதாகும்போது கல்வி மற்றும் திருமணச் செலவுகளை ஈடுகட்ட இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறலாம். இந்த திட்டத்தின் கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கலாம்.

Latest Slideshows

Leave a Reply