Gpay Mobile Recharge Charges : மொபைல் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்

Gpay Mobile Recharge Charges :

Google Pay May Charge Convenience Fees: கூகுள் பே என்று அழைக்கப்படும் ஜி பே-வில் பணப்பரிவர்த்தனை செயலி ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதலாக (Convenience Fees) வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் தற்போது (Gpay Mobile Recharge Charges) வெளியாகி உள்ளது. Google Pay கூகுள் பே என்று அழைக்கப்படும் தனியார் நிறுவனத்தின் செயலியில்  ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதலாக இனி 3 ரூபாய் வரை (Convenience Fees) வசூலிக்கப்படும் என்ற  தகவல் (Gpay Mobile Recharge Charges) வெளியாகி உள்ளது.

Paytm மற்றும் Phone Pay போன்ற பிற செயலிகள் ஏற்கனவே கூடுதல் கட்டணம் (Convenience Fees) வசூலிக்கப்படும் நிலையில் ஆனால் Google Pay- வில் மட்டும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு எந்தவித கூடுதல் கட்டணம் வசூலிக்காததால் இந்த செயலி மக்கள் பலராலும் விரும்பப்பட்டது. G Pay-ன் இந்த புதிய (Convenience Fees) குறித்து திரு.டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தனது X பக்கத்தில் கூகுள் பேயின் சமீபத்திய மாற்றத்தை குறித்து விளக்கமளித்துள்ளார். இருப்பினும் ரூ.101- 200 வரையிலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு ரூ.1 கூடுதல் கட்டணம் மற்றும் ரூ.201- 300 வரையிலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு ரூ.2 மற்றும் ரூ.300க்கும் அதிகமான ரீசார்ஜ் திட்டத்திற்கு ரூ.3 (Convenience Fees) ஆக வசூலிக்கப்படும் (Gpay Mobile Recharge Charges) எனக் கூறியுள்ளார். எனினும் G Pay நிறுவனம் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனாலும் அண்மையில் கடந்த நவம்பர் 10ம் தேதி ரீசார்ஜ் கட்டணங்களுக்கு என Terms Of Service என்ற புதிய விதிமுறைகளை மாற்றியமைத்தது.

இது ரீசார்ஜ் கட்டணங்களுக்கு என “கூகுள் ஃபீஸ்” என்ற புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் G Pay  நிறுவனத்தின் மற்ற சேவைகள் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் FASTag ரீசார்ஜ் போன்ற பிற பரிவர்த்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. எனினும் பயனர்கள் இந்த கூடுதல் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க ஜியோ மற்றும் ஏர்டெல், வோடபோன் செயலி மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply