
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
சென்னையில் 'Gramiya Thiruvizha 2024' வருகிற ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளது
சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஆரோக்கியமான உணவு மற்றும் பாரம்பரிய அரிசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மண்வாசனை என்ற அமைப்பு ஆனது இந்த வருடம் வேலம்மாள் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ‘Gramiya Thiruvizha 2024’-வை நடத்த உள்ளது. இந்த கிராமிய திருவிழாவுக்கு பசுமை விகடன் ஆனது தனது ஊடக ஆதரவை வழங்க உள்ளது.
இந்த ‘கிராமிய திருவிழா-2024’-ன் ஒரு பகுதியாக இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பதற்கான சந்தையும் நடைபெற உள்ளது. கிராமிய பொழுதுபோக்கு அம்சங்களோடு இந்த திருவிழா ஆனது சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த கிராமிய சந்தையில் எந்த கலப்படமும் இல்லாத மரச்செக்கு எண்ணெய், நாட்டுச் சர்க்கரை என்ற இயற்கை சார்ந்த விளைபொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களை விற்கும் கடைகள் ஆனது இடம் பெற உள்ளன.
கண்காட்சியில் நெல் ரகங்கள், நாட்டு விதைகள், மூலிகைகள் மற்றும் 100 வகையான அரிசிகள் போன்றவை இடம்பெற உள்ளன. இந்த திருவிழாவில் சிறுதானிய பிஸ்கெட்டுகள், சிறுதானிய மற்றும் பாரம்பரிய நொறுக்குத்தீனி வகைகள், கறுப்புக் கவுனி அரிசிகள் மற்றும் சிறுதானியத்தில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம், குல்பி, மர பொம்மைகள், சானிட்டரி நாப்கின்ஸ், தினை லட்டு, கம்பு லட்டு, எள்ளுருண்டை, கமர்கட் போன்ற பாரம்பரிய உணவு பண்டங்கள், பனையோலை பொருள்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் காட்சிக்கும் மற்றும் விற்பனைக்கும் இடம்பெற உள்ளன.
Gramiya Thiruvizha 2024 - உணவே மருந்து பற்றிய விழிப்புணர்வு :
இந்த நிகழ்ச்சி ஆனது பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் சிறுதானியங்கள் எங்கு வாங்கலாம், அவற்றில் என்னென்ன சமைக்கலாம் என்ற விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டும் விதமாக நடைபெற உள்ளது. மக்களில் பலருக்கும் இவற்றை எப்படி சமைக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை மற்றும் அறிந்திருக்கும் வாய்ப்புகள் ஆனது இல்லை. அப்படிப்பட்ட மக்களுக்கு வழிகாட்டும் விதமாக சென்னையில் இந்த விழா (Gramiya Thiruvizha 2024) நடைபெற உள்ளது.
பலவிதமான சிறுதானிய தோசை வகைகள் ஆனது இந்த நிகழ்ச்சியில் கண்முன்னே நேரடியாக சமைத்துக் காட்டப்படும். பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவுகள் நேரடியாக சமைத்து காண்பிக்கப்படும். மக்கள் சமையலில் உள்ள தங்களது சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி எப்படி சமைப்பது என்று தெரிந்து கொள்ள முடியும். இந்த நிகழ்ச்சி ஆனது இல்லத்தரசிகள், குறிப்பாக வயதில் மூத்தோர் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திருவிழாவில் நடைபெற உள்ள கிராமிய பொழுதுபோக்கு அம்சங்கள் :
இந்த கிராமிய திருவிழாவில் சித்தூர் குட்டை மற்றும் சிவகங்கை குட்டை போன்ற அரிய வகை தென்னிந்திய குட்டை ரக நாட்டு மாடுகள் பங்கு பெறுகின்றன. கன்றுக் குட்டிகளுடன் குழந்தைகள் கொஞ்சி விளையாட மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படும். இந்த கிராமிய திருவிழாவில் (Gramiya Thiruvizha 2024) ராட்டினம், பாரம்பரிய தின்பண்டங்கள், மாட்டு வண்டி, கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற உள்ளன.
இந்த விழாவின் சிறப்பம்சமாக நடைபெற உள்ள உலக சாதனை நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என முப்பாலினத்தவரும் பங்கு பெறலாம். இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பதற்கான சந்தையும் நடைபெற உள்ளதால், இதில் ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கெடுக்கலாம். மேலும், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு இந்த நிகழ்ச்சியில் விருதுகள் ஆனது வழங்கப்பட உள்ளன.
Latest Slideshows
-
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
-
Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது