Grammy Award 2024 : சிறந்த ஆல்பத்திற்கான பரிசை வென்ற முதல் கலைஞர் Taylor Swift

Grammy Award 2024 :

Grammy Awards-களில் 4 முறை ஆண்டின் சிறந்த ஆல்பத்திற்கான பரிசை வென்ற (Grammy Award 2024) முதல் கலைஞர் என்ற வரலாற்றை Taylor Swift பிப்ரவரி 11, 2024 அன்று உருவாக்கியுள்ளார். இசைத்துறையைப் பொறுத்தவரை அதிகம் பயன்படுத்தப்படும் Streaming Platform-களில் ஒன்று Spotify ஆகும் (Spotify – One Of The Most – Used Streaming Platforms). எப்பொழுதும் இசைத்துறையில் முதலிடத்திற்கான போட்டி ஆனது தீவிரமானது, வேடிக்கையானது மற்றும் கணிக்க முடியாதது ஆகும். ஒரு இரவின் இடைவெளியில், மேடைகள் மாறி, முடிவுகள் மாறி ஒரு கலைஞரின் புகழ் மாறலாம். இப்படிப்பட்ட தினமும் புதுப்பிக்கப்படும் இசைத் தளத்தில் Ed Sheeran ஆதிக்கம் செலுத்துகிறார். Ed Sheeran-க்கு 113,404,496 பின்தொடர்பவர்களும், Taylor Swift-க்கு 101,081,218 பின்தொடர்பவர்களும், Arijit Singh-க்கு 100,883,025 பின்தொடர்பவர்களும் உள்ளனர். Ariana Grande Billie Eilish, Drake மற்றும் Eminem ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 6வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

Spotify பின்தொடர்பவர்களின் அடிப்படையில் Ed Sheeran தொடர்ந்து முன்னணி கலைஞராக ஆட்சி செய்து வருகிறார். பாப் பிரபல டெய்லர் Taylor Swift, பாலிவுட் பாடகர்  Arijit Singh-கை பின்னுக்கு தள்ளி, Spotify கலைஞரின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். Spotify-யில் Taylor Swift மற்றும் Arijit Singh இடையேயான போட்டியானது  இசை பிரியர்களின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். இவர்கள் இருவரும் தங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த கணிசமான எண்ணிக்கையிலான வெளியீடுகளை தொடர்ந்து வழங்கி தங்களை  பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இருவரும் நீண்ட காலமாக ஒரு நிலையான போட்டியில் உள்ளனர். Spotify கலைஞரான Arijit Singh-கை கடந்து Taylor Swift இரண்டாவது அதிகம் பின்தொடரும் கலைஞர் ஆனார்.

இவர்களின் சமீபத்திய படைப்புகளைப் பொறுத்தவரை, Taylor Swift தற்போது தனது உலகளவில் விற்பனையான ‘The Eras Tour’ சுற்றுப்பயணத்தில் இருக்கிறார், மேலும் Arijit Singh-ன் சமீபத்திய ஹிந்தி பாடலான ‘Dil Haareya’ டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட்டது. Taylor Swift (Grammy Award 2024) விருதைப் பெற்ற பிறகு, “என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணம் இது என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply