இந்தியாவின் Shakthi Music Band “Grammy Award” வென்றது

இந்த 2024-ஆம் ஆண்டிற்கான கிராமி விருது சக்தி இசைக்குழுவுக்கு கிடைத்துள்ளது :

அமெரிக்காவில் இசைத் துறையில் உயரிய விருதான கிராமி விருது (Grammy Award) வழங்கும் நிகழ்ச்சி 05/02/2024 இன்று நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 66வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி ஆனது இன்று நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் கிராமி விருதுகள் (Grammy Award) ராக், பாப் நடனம் மற்றும் இசை என 94 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அமெரிக்கா இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதுகளின் கிராமி’ விருது ஒன்றாகும். National Academy Of Recording Arts & Sciences (தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் அகாடமி) ஆனது 1951-ம் ஆண்டு முதல் இன்று வரை ஆண்டுதோறும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. இந்த 2024-ஆம் ஆண்டிற்கான உலகில் இசைத்துறையின் உயர்ந்த விருதான Grammy Award ஆனது இந்தியாவின் சக்தி இசைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கிராமி’ விருது ஆனது கிடைத்தது. இன்று நடைபெற்ற இந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் சக்தி இசைக்குழுவிற்கு Grammy Award ஆனது சிறந்த ஆல்பம் பிரிவில் கிடைத்துள்ளது. சக்தி இசைக்குழுவின் திஸ் மொமென்ட் (THIS MOMENT) என்ற ஆல்பத்திற்காக இந்த கிராமி விருது கிடைத்துள்ளது. இந்த இசைக்குழுவில் பாடகர் சங்கர் மகாதேவன், பிரபல தபலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசைன், தமிழ்நாட்டை சேர்ந்த தாள கலைஞர், இசையமைப்பாளர்  செல்வகணேஷ், கிதார் இசைக்கலைஞர் ஜான் மெக்லாக்லின் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த இசைக்கலைஞர்கள் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. இந்த திஸ் மொமென்ட் (THIS MOMENT) ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் Grammy Award வழங்கப்பட்டுள்ளது.

பிரபல தபலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசைன் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோர் 2ஆவது முறையாக இந்த கிராமி விருது பெற்றுள்ளனர். பிரபல கடம் இசைக்கலைஞர் விக்கு விநாயகராமின் மகன் செல்வகணேஷ் விருது வென்றுள்ளார். இவர் வெண்ணிலா கபடிக்குழு, குள்ள நரிக்கூட்டம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தபலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசைன் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் அவரது இசைக்குழு உறுப்பினர்கள் கிராமி விருதை பெற்றுக்கொண்டனர். பல்வேறு தரப்பினர் இந்த கிராமி விருது பெற்ற சக்தி இசைக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்த்து செய்தியில், “இன்று இந்தியாவுக்கு கிராமி மழை பொழிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்

Latest Slideshows

Leave a Reply