2028 இல் COP33 ஐ நடத்த இந்தியா விரும்புகிறது - COP28 இல் பிரதமர் மோடி அறிவிப்பு

COP33-ஐ 2028 ஆம் ஆண்டில் இந்தியா நடத்த தயாராக உள்ளது என்று COP28 நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். Conference Of Parties (COP – கட்சிகளின் மாநாடு) என்பது United Nations Framework Convention On Climate Change (UNFCCC)-ன் மூலம் காலநிலை மாற்றத்தினை மதிப்பாய்வு செய்து ஒரு முடிவெடுக்கும் தளமாகும் துபாயில் டிசம்பர் 1 அன்று நடைபெற்ற COP 28 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், “மக்கள் தொகை குறைவாக உள்ள பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் மாசு அளவு ஆனது மிகக் குறைவு” என்றார். உலகத் தலைவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 2030ஆம் ஆண்டுக்குள் மாசு உமிழ்வை 45% குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார். உலகளாவிய உமிழ்வைக் கடுமையாகக் குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி  வேண்டுகோள் விடுத்தார்.

Nationally Determined Contribution (NDC) :

Nationally Determined Contribution (NDC) என்பது உமிழ்வைக் குறைத்தல் மற்றும் காலநிலை தாக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு காலநிலை செயல் திட்டம் ஆகும். “உலக மக்கள்தொகையில் இந்தியாவின் மக்கள்தொகை ஆனது 17% ஆகும். ஆனால் இந்தியா ஆனது உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் 4% மட்டுமே உள்ளது. இந்தியா NDC இலக்குகளை அடைவதில் வேகமாக முன்னேறி வருகிறது. உண்மையில், 9 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைந்துள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் பிரதமர் மோடி ஒவ்வொரு நாடும் தங்களது NDC இலக்குகளை அடைவதற்கு உண்மையாக உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

COP28 - 'Green Credit' திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார் :

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தனித்துவமான ‘Green Credit’ திட்டத்தை பிரதமர் மோடி COP28 கூட்டத்தில் அறிவித்தார். “நான் இந்த COP28 மன்றத்தில் இருந்து மேலும் ஒரு கிரகத்திற்கு ஆதரவான மற்றும் நேர்மறையான முன்முயற்சியை அறிவிக்கின்றேன். அதுதான் ‘Green Credit’ திட்டம் (பசுமை கடன் முன்முயற்சி திட்டம்) ஆகும்” என்று பிரதமர் மோடி கூறினார். ‘Green Credit’ திட்டம் (“பசுமை கடன்” முன்முயற்சி) ஆனது, ‘LIFE’ இயக்கத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பசுமைக் கடன் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்த பிரதமர் மோடி உலகத் தலைவர்களை இந்த முயற்சியில் இணையுமாறு கேட்டுக் கொண்டார். “புதைபடிவமற்ற எரிபொருளின் பங்கை இந்தியா 50%-மாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது” என்றும்  “மேலும் 2070க்குள் நிகர பூஜ்ஜியத்தை நோக்கி இந்தியா ஆனது முன்னேறும்” என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியா தனது பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பாதையில் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்முயற்சிகள் காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை எதிர்கொள்வதில் நாட்டின் முன்முயற்சி அணுகுமுறையைக் குறிக்கின்றது என்று பிரதமர் மோடி கூறினார்.

​​​​பிரதமர் மோடி உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எடுத்துரைத்தார் மற்றும் காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். பிரதமர் மோடி உலகளாவிய தலைவர்களுடன் பயனுள்ள விவாதங்களில் ஈடுபட்டார் மற்றும் உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். வளர்ந்த நாடுகளை 2050க்குள் கார்பன் தடயத்தின் தீவிரத்தை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். துபாயில் சுமார் 21 மணி நேரம் பிரதமர் மோடி தங்கியிருக்கும் போது ஏழு இருதரப்பு சந்திப்புகள், 4 உரைகள் மற்றும் காலநிலை நிகழ்வுகள் குறித்த இரண்டு சிறப்பு முயற்சிகளில் பங்கேற்பார் என்று அதிகாரிகள் 01/12/2023 அன்று தெரிவித்தனர்.

Latest Slideshows

Leave a Reply