Green, Red, Black Grapes Benefits: மூன்று வகையான திராட்சையில் சிறந்தது எது?

Three Grapes Benefits: இயற்கை நமக்களித்த உன்னதமான பரிசுகளில் ஒன்றுதான் பழங்கள். அந்த பழங்களில் மிகவும் சிறப்புவாய்ந்தது திராட்சை பழம். சிட்ரஸ் என்னும் குடும்ப வகையை சேர்ந்தது. லேசான புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையில் இருக்கக் கூடியதுதான் திராட்சை பழங்கள்.

திராட்சை பழங்களை பார்த்தோமேயானால் கருப்பு திராட்சை (Black Grapes), சிவப்பு திராட்சை (Red Grapes), பச்சை திராட்சை (Green Grapes) என மூன்று வகையான திராட்சை பழங்கள் இருக்கிறது. இந்த மூன்று வகையான பழங்களுமே அதிக சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது. இந்த மூன்று பழங்களும் சுவை அளவில் சிறிது மாறுபடும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, வைட்டமின் பி1, பி2, பி3, பி6, நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த 3 திராட்சையின் நன்மைகள் (Green, Red, Black Grapes Benefits) மற்றும் எது சிறந்தது எதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

Three Types Of Grapes Benefits In Tamil

Black Grapes Benefits - Platform Tamil

கருப்பு திராட்சை நன்மைகள் (Black Grapes Benefits)

கருப்பு மற்றும் ஊதா நிறத்தில் இருக்கும் திராட்சைகள் (Black Grapes Benefits) அதிகமாக ஜூஸ் ஆக குடிக்க பயன்படுத்துவார்கள். இதற்கு பன்னீர் திராட்சை என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஒரு கிண்ணம் கருப்பு திராட்சையில் (Black Grapes) புரோட்டீன், கலோரி, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இது சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால்  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதிலுள்ள ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவை வயிற்றின் அமைப்பை நல்ல முறையில் வைத்திருக்க உதவுகிறது.

கருப்பு திராட்சை (Black Grapes) வகை புற்றுநோய்களையும் குறிப்பாக மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதிலுள்ள அதிகளவிலான ஆன்டிஆக்சிடண்ட் புற்று நோய் கிருமிகளுக்கு எதிராக போராடுகின்றன. இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. திராட்சையை தினமும் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை படிப்படியாக குறைத்து நமது உடலை சீராக்கும். 

சிவப்பு திராட்சை நன்மைகள் (Red Grapes Benefits)

Red Grapes Benefits - Platform Tamil

சிவப்பு திராட்சை (Red Grapes) வகை இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. இவ்வகையான திராட்சையை ஜாம், ஜெல்லி, ஃபுரூட் சாலட் போன்றவைகளை தயாரிக்க பயன்படுத்துகின்றனர். ரெட் ஒயின் தயாரிக்க இந்த திராட்சையை பயன்படுத்துகின்றனர். இதிலும் கலோரி, புரோட்டீன், கார்போஹட்ரேட்கள் நிறைந்துள்ளது. சிவப்பு (Red Grapes) வகை திராட்சைகளும் உடலுக்கு மிகவும் நல்லது. யூரிக் அமிலத்தை குறைத்து சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாதுகாக்கிறது. இதிலுள்ள ஃப்ளவனாய்டுகளின் ஆக்ஸிஜனேற்றங்கள் கண் கோளாறு, கண்களில் புரைவிழுவது போன்ற பிரச்சனைகளை தடுக்கின்றன. இது இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இரத்த உறைவு போன்ற பிரட்சனைகளையும் குறைக்க செய்கிறது. சிவப்பு திராட்சையில் (Red Grapes) உள்ள ரெஸ்வெராட்ரோல் மூளைக்கு 200% இரத்த ஓட்டத்தை அளிக்கவல்லது, இதனால் மூளை வேகமாக வேலை செய்யும் திறனை விரைவுபடுத்துகிறது. இது கொழுப்பை குறைக்க செய்கிறது மேலும் இரத்தத்தில் கொழுப்பு உறுஞ்சுவதை தடுக்கிறது. உடல் பருமன் அவதையும் தடுக்கிறது. இவ்வகையான அனைத்து நன்மைகளும் சிவப்பு திராட்சையில் (Red Grapes Benefits) நிறைந்துள்ளது.    

பச்சை திராட்சை நன்மைகள் (Green Grapes Benefits)

Green Grapes Benefits - Platform Tamil

பச்சை திராட்சையிலும் (Green Grapes) அதிகப்படியான சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. இவை அதிக சுவை கொண்டது. இதை கேசரி போன்ற இனிப்பு வகை உணவுகளில் அதிகம் பயன்படுத்துவார்கள்.  பச்சை திராட்சையிலும் புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைட்ரேட், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.  வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. சரும ஆரோக்கியதையும் பராமரிக்கிறது. இதிலுள்ள காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது. வயதானபிறகு வரும் எலும்பு தேய்மானத்தையும் சரி செய்கிறது.  சுவாசிக்க சிரமப்படுபவர்கள் பச்சை திராட்சையை (Green Grapes) தினமும் சாப்பிடலாம், ஆஸ்துமா போன்ற பிரட்சனைகளை சரிசெய்கிறது. இந்த வகையான திராட்சையை தினமும் சாப்பிட்டு வர வயிற்று எரிச்சல் சரியாகும் செரிமான பிரட்சனையும் வராமல் பாதுகாக்கும். இதில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் சருமத்திற்கும் சிறந்ததாக உள்ளது. திராட்சையின் சாறை முகத்திலும் தடவலாம், தினமும் திராட்சையின் சாறை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறும் இத்தகு நன்மைகள் பச்சை திராட்சையில் (Green Grapes Benefits) நிறைந்துள்ளது.

பொதுவாகவே பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியம் தர கூடியதாக தான் உள்ளது. மேற்குறிப்பிட்ட மூன்று வகையான திராட்சை பழங்களுமே சத்துக்கள் நிறைந்ததுதான் எனவே இவை மூன்றும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கவல்லது. சுவைகளில் மாற்றம் இருந்தாலும் உடலுக்கு தரக்கூடிய நன்மையை இவை மூன்றுமே சரியாகதான் அளிக்கிறது. ஒவ்வொரு சத்துக்களும் உடலில் ஏற்படக்கூடிய பிரட்சனைகளை தீர்க்கிறது. எனவே திராட்சையின் மூன்று வகைகளும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவை.

Leave a Reply

Latest Slideshows