GSLV F15 launched On January 29 : இஸ்ரோவின் 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி F15 ஜனவரி 29-ம் தேதி ஏவப்படவுள்ளது

இஸ்ரோவின் 100 வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 (GSLV F15 launched On January 29) செயற்கைக்கோளுடன் வரும் ஜனவரி 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ போக்குவரத்து வழிகாட்டுதல் சேவைக்கான நாவிக் தொழில்நுட்பத்தை (Navik Technology) பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் கடல்வழி, தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கும், பாதுகாப்பு பயன்பாட்டுக்கும் உதவும் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை Indian Regional Navigation Satellite System (IRNSS) உருவாக்க திட்டமிடப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையான கால கட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

என்விஎஸ் 01 செயற்கைக்கோள்

இதன் மூலம் இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளதுடன் நாட்டின் கண்காணிப்பு பணிகள் அனைத்தும் இதன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் ஐஆா்என்எஸ்எஸ் திட்டத்தில் தற்போதைய தேவைக்குகேற்ப மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த (GSLV F15 launched On January 29) இஸ்ரோ திட்டமிட்டது. இத்திட்டத்தின்படி முதற்கட்டமாக ஐஆா்என்எஸ்எஸ் 1G செயற்கைக்கோளுக்கு பதிலாக என்விஎஸ்-01 செயற்கைக்கோளை கடந்த 2023-ம் ஆண்டு மே 29-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

என்விஎஸ் 02 செயற்கைக்கோள் (GSLV F15 launched On January 29)

GSLV F15 launched On January 29 - Platform Tamil

இதனை தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் தற்போது என்விஎஸ்-02 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப் 15 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து (GSLV F15 launched On January 29) வரும் ஜனவரி 29-ம் தேதி காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த என்விஎஸ்-02 செயற்கைக்கோள் சுமார் 2250 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். இந்த செயற்கைகோளில் L1, L5 மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்ட், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அணு கடிகாரம் என பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும் எனவும், பேரிடா் காலங்களில் நமக்கு துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோவின் 100 வது ராக்கெட்

இதுவரை ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ 99 ராக்கெட்களை (GSLV F15 launched On January 29) ஏவியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்திற்காக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டை கடந்த மாதம் ஏவிய நிலையில் வரும் 29-ம் தேதி ஏவப்படும் ஜிஎஸ்எல்வி எப் 15 (GSLV F15) ராக்கெட் இஸ்ரோவின் 100 ராக்கெட் ஏவுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply