Gukesh D : விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளிய செஸ் வீரர்...

Gukesh D - ஆனந்தை பின்னுக்கு தள்ளிய வீரர் :

சர்வதேச செஸ் போட்டியின் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் நம் தமிழக வீரர் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் திடீரென தற்போது உலகின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். ஃபீடே அமைப்பின் சார்பாக நடத்தும் செஸ் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் தற்போது நடந்துள்ளன. நம் தமிழக வீரர் குகேஷ் அசர்பைஜாவின் வீரரை எதிர்கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியின் 44 ஆவது நகர்த்தலில் நம்முடைய குகேஷ் வெற்றி பெற்றார். இதனால் சர்வதேச லைவ் ரேட்டிங்கில் டாப் 10 இடத்தில் நுழைந்துள்ளார். இதன் மூலம் சர்வதேச செஸ் போட்டியில் சாதனை படைத்த விஸ்வநாத் ஆனந்தின் சாதனையை முறையடித்துள்ளார். ஆனந்த் 2754 புள்ளிகள் எடுத்து பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் குகேஷ் 2755.9 புள்ளிகள் எடுத்து ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இது செஸ் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் 1986 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக சாதனை படைத்தார். தமிழகத்தை சேர்ந்த 17 வயதான குகேஷ், விஸ்வநாத் ஆனந்தை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

Gukesh D - நம்பர் ஒன் வீரராக வருவார் :

இது குறித்து தரவரிசை பட்டியல் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று வெளியிடப்படும். அதுவரை விஸ்வநாத் ஆனந்தைவிட குகேஷ் தான் முன்னிலையில் இருப்பார். நிச்சயமாக இந்தியாவின் மிகப்பெரிய வீரராக குகேஷ் இடம் பிடிப்பார். இதேபோன்று தரவரிசை பட்டியலிலும் எந்த மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு இந்த ஃபீடே அமைப்பு கூறி உள்ளது.

ஆனந்தை குருவாகக் கொண்டுள்ள குகேஷ் அவர்கள் அவரையே பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆசிரியர் மிஞ்சிய சிஷ்யன் என்னும் பெயரை எடுத்துள்ளார். இதேபோன்று அவர் உலகக் கோப்பையில் கார்ல்சனை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply