GV Prakash Captain Miller Movie Review : கேப்டன் மில்லர் படத்தின் விமர்சனம் சொன்ன GV பிரகாஷ்குமார்

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கும் என்று இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் (GV Prakash Captain Miller Movie Review) எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 6ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் மேக்கிங்கைப் பார்க்கும்போது ஹாலிவுட் தரத்தில் உள்ள காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் தனுஷ் பேசுகையில், “உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட கேப்டன் மில்லர் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். அவரும், படக்குழுவும் உழைத்ததெல்லாம் பார்க்கும் போது, நான் உழைத்தேன் என்று சொல்ல கூச்சமாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், அருண் மாதேஸ்வரனைப் பார்க்கும்போது எனக்கு வெற்றி மாறன் நியாபகம் தான் வருகிறது. கேப்டன் மில்லர் படத்தின் கதையைச் சொல்லும் போது பெரிய அளவில் நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. ஆனால் படம் பார்த்துவிட்டேன். அருண் மாதேஸ்வரன் சம்பவம் பண்ற கைன்னு புரிந்தது” என்று தனுஷ் கூறியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

GV Prakash Captain Miller Movie Review :

கேப்டன் மில்லர் படம் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பொதுவாக படம் வெளியாவதற்கு முன் படத்தின் காட்சிகள் அல்லது படம் முழுவதையும் படக்குழுவினர் பார்த்துவிடுவார்கள். அந்த வகையில் கேப்டன் மில்லரின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்தின் சில காட்சிகளைப் பார்த்துள்ளார். கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ஜி.வி.பிரகாஷ்குமார் ட்வீட் ஒன்றை (GV Prakash Captain Miller Movie Review) வெளியிட்டுள்ளார்.

அதில், “பின்னணி இசை மற்றும் இசையமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. இந்த படம் ஃபயர் ஆக உள்ளது. தனுஷின் இண்ட்ரோ மியூசிக் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என (GV Prakash Captain Miller Movie Review) தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் – ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணி பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம், அசுரன், வாத்தி போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply