Hanuman Movie Team Donates To Ram Mandir : ராமர் கோயிலுக்கு நன்கொடை வழங்கிய அனுமன் படக்குழு

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் மேம்பாட்டுப் பணிகளுக்காக அனுமன் படக்குழு 2.6 கோடி நன்கொடை (Hanuman Movie Team Donates To Ram Mandir) அளித்துள்ளது. ராமர் கோயிலுக்கு ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்டுகளுக்கு அனுமன் படக்குழுவினர் பணத்தை வழங்கியுள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா :

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் முழுக்கு இன்று ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் கடந்த 18ம் தேதி ஐந்து வயது குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் இந்த சிலையை உருவாக்கியுள்ளார். இந்த கோவிலை கட்டுவதற்கு பல்வேறு பிரபலங்கள் பணமும், பொருளும் அளித்துள்ளனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது சார்பில் 30 கோடி நன்கொடை அளித்துள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. தற்போது அனுமன் படக்குழுவும் ராமர் கோவில் வளர்ச்சிக்காக பெரும் தொகை ஒன்றை நன்கொடையாக (Hanuman Movie Team Donates To Ram Mandir) வழங்கியுள்ளது.

Hanuman Movie Team Donates To Ram Mandir :

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள படம் அனுமன். பிரசாந்த் வர்மாவின் சினிமா பிரபஞ்சத்தின் முதல் படமான அனுமன் கடந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகி யாரும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தில் வினய் ராய், அம்ரிதா ஐயர், வரலஷ்மி சரத்குமார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி படக்குழு சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு, அனுமன் படத்தின் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையில் இருந்து 5 ரூபாய் நன்கொடையாக வழங்க படக்குழு (Hanuman Movie Team Donates To Ram Mandir) முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனுமன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படக்குழு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. இதுவரை அனுமன் படத்திற்கு 55,28,211 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. ராமர் கோயிலுக்கு ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய் வீதம் 55,28,211 டிக்கெட்டுகளுக்கு அனுமன் படக்குழுவினர் பணத்தை வழங்கியுள்ளனர். X தளத்திலும் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply