Happy Birthday Senthil: நகைச்சுவை நாயகன் செந்தில் பிறந்த நாள்

செந்தில் (Actor Senthil) ஒரு தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நடிகர் செந்தில் (Actor Senthil) ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூரில் 1951ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை ராமமூர்த்தி, தாயார் திருக்கம்மாள். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர், தந்தை திட்டியதால் 12 வயதில் சொந்த ஊரை விட்டு ஓடிவிட்டார். முதலில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை கிடைத்தது. பின்னர் மதுக்கடையில் வேலை செய்து வந்தார். பின்னர் நடிகர் செந்தில் (Actor Senthil) நாடகத்தில் சேர்ந்து தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். இவர் நடித்த நாடகத்திறன் இவரை சினிமா துறையில் நுழைய உதவியது.

இதனைத் தொடர்ந்து அவர் சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவரது வாழ்க்கையில் 1983 இல் வெளிவந்த மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது பெற்றோரைச் சந்திக்கச் சென்ற அவரை அன்புடன் வரவேற்றனர். 1984 இல் கலைச்செல்வி என்பவரை மணந்தார். அவருக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் இணைந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். இருவரையும் ஒன்றாக திரையில் பார்த்தாலே சிரிப்பு வரும். இருவரும் சேர்ந்து நகைச்சுவை உலகில் பதினைந்து வருடங்களாக செலுத்தி வந்தனர்.

செந்தில் நடித்த படங்கள் (Senthil Acted Movies):-

தானா சேர்ந்த கூட்டம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், சத்யம், ஜெயம், மௌனம் பைசாதே, ராஜ்ஜியம், சுயம்வரம், படையப்பா, அவள் வருவாளா, நட்புக்காக, சமுத்திரம், கண்டுகொண்டானே கண்டுகொண்டானே,நேசம், தர்ம சக்கரம், இந்தியன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பரம்பரை , செல்வா , முத்து , சந்திரலேகா , பெரிய குடும்பம் , விஷ்ணு , முத்து குளிக வரீயா , ரசிகன் , டூயட் , நம்மவர் , நாதாமா , பேண்ட் மாஸ்டர் , மகராசன் , ஊர் மரியாதை , சேரன் பாண்டியன் , ஜெயில்பேர்ட், மற்றும் 500 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

கரகாட்டகாரன் பட நகைச்சுவை செந்தில் - கவுண்டமணி (Goundamani Senthil Comedy) :-

இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, செந்தில், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கரகாட்டகாரன். இது நகைச்சுவை நிறைந்த குடும்பப்படமாகும். தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கிராமத்து வாசனையுடன் எடுக்கப்பட்ட படமாகும். இதில் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவைக் (Goundamani Senthil Comedy) கலாட்டாக்கள் இன்றும் பார்ப்பவர்களை சிரிக்கவைத்து கண்களில் நீர்க்க வைக்கின்றன, செந்தில், கவுண்டமணி என்றாலே அனைவருக்கும் இன்றளவும் நினைவில் வருவது ‘வாழைப்பழச்’ சண்டை நகைச்சுவை ஆகும். இதுமட்டுமல்லாமல் பல்வேறு நகைச்சுவையில் நடித்து இன்றைக்கும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

Leave a Reply

Latest Slideshows