Harbhajan Singh Advice : ஹர்திக் பாண்டியா இடத்தில் அஸ்வினை ஒப்பிட முடியாது

இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்கக் கூடாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh Advice) தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோற்று பரிதாபமாக வெளியேறியது.

அதேபோல் நடப்பு உலக கோப்பை தொடரிலும் நியூசிலாந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஃபினிஷர் ஆகிய இருவரின் பணிகளையும் ஹர்திக் பாண்டியா தனி ஒருவராகச் செய்ததால், இந்திய அணி அனைத்துப் போட்டிகளிலும் எளிதாக வெற்றி பெற்றது. தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவரது பணியைச் செய்யக்கூடிய சரியான 2 வீரர்களை ப்ளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டிய அவசியம் (Harbhajan Singh Advice) ஏற்பட்டுள்ளது.

Harbhajan Singh Advice :

Harbhajan Singh Advice : இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியில் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் இல்லை என்றால் மிட்செல் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இல்லை என்றால் கேமரூன் கிரீன் ஒரே பங்கை வகிக்கக்கூடிய மூன்று வீரர்கள் உள்ளனர்.

ஆனால் இந்திய அணியில் அப்படிப்பட்ட வீரர்கள் இல்லை. எனவே ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்புவது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. அவரால் இந்திய அணியின் கூட்டணி சிறப்பாக அமைந்தது. ஆனால் ஹர்திக் இல்லாத நிலையில் சூர்யகுமார் யாதவும் , 10 ஓவர்கள் வீசக்கூடிய சிறந்த பந்துவீச்சாளரான முகமது ஷமி ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக இடம் பெற வேண்டும்.

இவர்களுக்குப் பதிலாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினை ஆல்ரவுண்டராக சேர்க்கக் கூடாது என நினைக்கிறேன். நிச்சயமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனையாக அமையும். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply