Harbhajan Singh Playing 11 : இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஹர்பஜன் சிங் கணித்தார்

விசாகப்பட்டினம் :

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கயுள்ள நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆடும் சூழல் எப்படி இருக்கும் என ஹர்பஜன் சிங் கணிப்பு (Harbhajan Singh Playing 11) ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஜடேஜா காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து சர்பிராஷ்கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Harbhajan Singh Playing 11 :

இந்நிலையில் இந்தியாவின் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கணிப்பை (Harbhajan Singh Playing 11) வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், ரோஹித் சர்மா ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார். மூன்றாவது பேஸ்மேனாக கில்லிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். கில் ஒரு திறமையான வீரர் என்பதால், அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவளிக்கும். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் நான்காம் இடத்தில் விளையாடுவார். மூத்த வீரர்களுக்கு அதிக பொறுப்பு கொடுக்கப்படும்போது அவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். என்னைக் கேட்டால் நாளைய ஆட்டத்தில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

சர்பராஸை ஐந்தாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் அதிக ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் ஹர்பஜன் சிங் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரை அணியில் தேர்வு செய்துள்ளார். இதன் மூலம், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ்.பாரத் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை தேர்வு செய்து, குல்தீப் 11வது வீரராக களமிறங்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். குல்தீப்பின் சுழற்சி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக அமையும். இந்திய அணி கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் விளையாட வேண்டும் என்றால் அது குல்தீப் யாதவ் தான். ஆடுகளத்தில் பந்து திரும்பும்போது நாங்கள் நான்கு ஸ்பின்னர்களுடன் விளையாடுவதில் தவறில்லை. ஆடுகளத்தில் வேகமான பந்துகள் இருந்தால் சிராஜை வைத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் குல்தீப் தான் சரியான தேர்வு என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply