Hardik Pandya : ஹர்திக் பாண்டியா தன்னை தோனி என்று நினைத்துக் கொண்டுள்ளார்...

இந்திய அணி தோல்வி :

இந்திய அணி தற்போது நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் படுதோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் Hardik Pandya தான். இது மட்டுமல்லாமல் போட்டி முடிந்தவுடன் ரொம்ப கூலாக பதில் அளித்துள்ளார். இதனால் இந்த தோல்விக்கு விளக்கம் அளித்தது குறித்து முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் தெரிவித்துள்ளார். Processes More Important Than Result தோல்விக்குப் பிறகு தோனி அளித்த பேட்டியில் சிறப்பான வசனம் இதுவும் ஒன்றாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அணி தோற்றபோது அவர் இந்த வார்த்தைகளால் தான் ரசிகர்களின் மிகவும் அற்புதமாக கையாண்டார். அதற்கு அடுத்த சீசனிலும் சென்னை அணியை உருவாக்கி வெற்றியும் பெற்றுத் தந்தார். அவர் வெறும் சொல்லோடு நின்று விடாமல் செயலாக செய்து காட்டுபவர்.

ஆனால் இந்திய அணியின் தற்போதைய டி20 அணி கேப்டன் Hardik Pandya ஒவ்வொரு முறை தோல்வியின் போதும் இந்த வார்த்தைகளை கூறி ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஆன டி20 தொடர் தோல்விக்கு பிறகு முன்னாள் பவுலர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில், இந்திய அணி வீரர்கள் தங்களின் திறமையை சிறப்பாக நிரூபிக்க வேண்டும். வெற்றிக்காக தீவிரமாக போராடக் கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறி வருவது நன்றாக தெரிகிறது. இதேபோன்று கேப்டன் என்ன செய்வது என்று புரியாமல் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

பேட்டிங் செய்பவர்களால் பந்து வீச முடியாது. வந்து நன்றாக வீசுபவர்களால் பேட்டிங் அருமையாக செய்ய முடியாது என்று காரணம் கூறிக் கொண்டிருக்கிறார். நமக்கு சாதகமான வீரர்களை தேர்வு செய்வதை விட்டு விட்டு திறமையான வீரர்களை தேர்வு செய்தால் அணிக்கு சாதகமாக இருக்கும். பிராசஸ் உள்ளிட்ட வார்த்தைகளை தவறாக பயன்படுத்திக் கொண்டு தோனியை பின்பற்றி கூலாக இருப்பதால் அவர் ஒன்றும் தோனி ஆகிவிட முடியாது என்று விமர்சித்துள்ளார்.

Hardik Pandya - பொறுப்பற்ற கேப்டன் :

இந்திய அணி T20 தொடர்களை பொருத்தவரை சுமாரான அணியாகவே இருந்து வருகிறது. உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறாத அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பது கொஞ்சம் கூட நம்ப முடியாத விஷயமாகும். இப்படி ஒரு ஏமாற்றமான தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் Hardik Pandya இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply