இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur தோனியை ஓரங்கட்டினார்

கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur இமாலய சாதனை :

இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த கேப்டனும் தொடாத உச்சத்தை தொட்டு இருக்கிறார். இந்தியாவில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஆனது நடைபெற்று வருகிறது. இது ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கேப்டனாக 101வது சர்வதேச டி20 போட்டி ஆகும். இதுவரை அதிக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையை இதன் மூலம் Harmanpreet Kaur படைத்துள்ளார். வான்கடே மைதானத்தில் இந்த தொடரின் முதல் போட்டி ஆனது நடைபெற்றது. ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி என இரண்டையும் சேர்த்து பார்த்தால் கூட ஹர்மன்ப்ரீத் கவுரே அதிக சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங், ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். 100 சர்வதேச டி20 போட்டிகளுக்கு மெக் லானிங் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 93 போட்டிகளுடன் மூன்றாவது இடத்தில் இடம் பெற்றுள்ளார். ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் அதிக சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர். 76 போட்டிகளுக்கு ஆரோன் பின்ச்  கேப்டனாக இருந்துள்ளார். தோனி 72 போட்டிகளுடன் ஆரோன் பின்ச்க்கு அடுத்த இடத்தில் இடம் பெற்றுள்ளார்.

வெற்றிகள் பெற்று கொடுத்ததில் Harmanpreet Kaur மூன்றாவது இடத்தில் இடம் பெற்றுள்ளார் :

100 போட்டிகளில் 76 வெற்றிகளை கேப்டன் மெக் லானிங் பெற்றுக் கொடுத்து அதிக வெற்றி சதவீதம் வைத்திருக்கிறார். இங்கிலாந்து அணியின் சார்லட் எட்வர்ட்ஸ் 68 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து அடுத்த இடத்தில் இருக்கிறார். அதிக போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்மன்ப்ரீத் செயல்பட்ட போதும் அதிக தோல்விகளையும் பெற்றுள்ளார். 101 போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் கேப்டனாக 57 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் மற்றும் 39 தோல்விகளையும் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் தான் Harmanpreet Kaur இடம் பெற்றுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply