Hayyoda Song : ஜவான் படத்தின் ஹயோடா பாடல் வெளியீடு...

Hayyoda Song :

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்-நயன்தாரா நடித்துள்ள ஜவான் படத்தின் அடுத்த பாடலான Hayyoda Song வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ஷாருக்கான். கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாருக்கான் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் தற்போது டங்கி படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் டைகர் 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி திரைப்படம் ஜவான் ஆகும். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ, பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாராவும், ஜவான் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாகவும் நடிக்கிறார். பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, இசைமைப்பாளர் அனிருத் இசைமைக்கிறார். தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் செப்டம்பர் 7- ஆம் தேதி வெளியாக உள்ளது.

முன்னதாக, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்தின் ட்ரைலராக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜவான் படத்தின் அதிரடி PREVUE வீடியோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜவான் படத்தின் முதல் பாடலாக வந்த “வந்த எடம்” பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடலுக்கு ஷாருக்கான் ஆயிரம் பெண் டான்ஸர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்நிலையில் ஜவான் படத்தின் Hayyoda Song தற்போது வெளியாகி உள்ளது. அனிருத்தின் துள்ளலான இசையில் ஷாருக்கான் – நயன்தாராவின் ரொமான்டிக் பாடலாக தயாராகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply