10 Health Benefits of Pomegranate in Tamil | மாதுளம் பழம் பயன்கள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளை பழம் (Pomegranate). இந்த பழத்திற்கு அயல் நாடுகளில் சைனீஸ் ஆப்பிள் (Chinese Apple) என்ற பெயரும் உண்டு. உலகம் முழுவதும் 220 வகையான மாதுளைகள் இருக்கிறது. பிளேக் மற்றும் புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் வராமல் தடுக்கிறது. இந்த மாதுளையில் கலோரிகள், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே இவ்வளவு சத்துக்கள் மாதுளையில் நிறைந்துள்ளது. 

மாதுளையின் 10 நன்மைகள் (Pomegranate Benefits):

  1. மாதுளை (Pomegranate) இதயதிற்கு நல்லது. அதிக இரத்த அழுத்தம், இதய சம்பந்தமானப் பிரச்சனைகளில் இருப்பவர்கள் மாதுளையை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடு என்னும் தனிமத்தை அதிகரித்து இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இருதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. 
  2. நாட்டு மாதுளையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இது மட்டும் இல்லாமல் பரம்பரை ரீதியாக வரும் சர்க்கரை நோயை தடுக்கும் ஆற்றலும் இந்த மாதுளைக்கு உண்டு.
  3. மாதுளையில் இரத்த உற்பத்திக்கு தேவையான போலெ மற்றும் இரும்பு சத்து வளமாக நிறைந்துள்ளது. பொதுவாக உடலில் இரும்புச்சத்து குறையும் போதுதான் இரத்த சோகை உருவாகும். இந்த பிரச்னை இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் மாதுளையை சாப்பிட்டு வர உடலில் உள்ள இரத்தம் அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.
  4. மாதுளையில் (Pomegranate)ல் Vitamin C அதிகம் நிறைந்துள்ளதால். இது சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைக்க உதவுகிறது. மாதுளையை தினமும் சாப்பிட்டு வர இதில் இருக்கும் ஆன்டி ஏஜிங் பண்புகள் முதுமையை தாமத படுத்தும். மேலும் உடலில் புதிய செல்களை உற்பத்தி செய்து சரும சுருக்கம் மற்றும் சரும தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.
  5. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும். இதிலுள்ள அலர்ஜி எதிர்புப் பண்புகள் மற்றும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை படுத்தும். இதன் மூலமாக உடலை பிற நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கிறது மாதுளை.
  6. பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மாதுளையில் (Pomegranate) உள்ள சில தனித்துவமான பண்புகள் பற்களில் ஃபிளேக் உருவாவதை தடுக்கிறது. இதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும். பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் தினமும் ஒரு மாதுளையை சாப்பிடலாம்.
  7. செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இந்த பழத்தில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இதனை சாப்பிட்டு வர செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதையும் தடுக்கிறது.
  8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது என்று பல ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர். மாதுளையை (Pomegranate) தினமும் சாப்பிட்டு வர புற்று நோய் வருவதை தடுக்கப்படும்.
  9. நியாபக சக்தியை அதிகரிக்கும். மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்தியை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்கும். இதன் காரணமாக நியாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் வராமலும் தடுக்கும்.
  10. பெண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளை (Pomegranate) சாப்பிட்டு வர ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைந்து மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மான பிரச்சனைகளை தடுக்கும் ஆற்றல் மாதுளைக்கு உண்டு. எனவே பெண்கள் மாதுளையை சாப்பிட்டு வர ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும். மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளையும் மாதுளைப்பழம் தீர்க்கிறது.

Health Benefits of Pomegranate in Tamil

எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது

நீங்கள் இயற்கையாகவே உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், மாதுளை நிச்சயமாக உங்களுக்கானது. வயது அதிகமாக அதிகமாக எலும்பின் அடர்த்தி குறையத் தொடங்குகிறது. இதனால் எலும்புகளில் வலி ஏற்படுகிறது. மாதுளையில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்து காணப்படுவதால் இது எலும்பின் அடர்த்தியை இழக்காமல் பாதுகாக்கிறது. இந்த ஃபிளாவனாய்டுகள் உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவை. எலும்புகளின் வலிமை குறைவதால் குருத்தெலும்பு பாதிப்பு மற்றும் கீழ்வாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷியன் என்ற பத்திரிகை வெளியிட் ஆய்வில், மாதுளை சாறானது கீல்வாதம் உள்ளவர்களுக்கு நொதிகள் காரணமாக ஏற்படும் மூட்டு சேதத்தைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

மாதுளை பழத்தில் ஆன்டி – ஆக்ஸிடன்கள், வைட்டமின் C ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிது. இதனால் மாதுளை பழமானது நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. உங்கள் உடலில் உருவாகும் நோய் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மன அழுத்தத்தை சரி செய்ய

மாதுளை உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி மாதுளை மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ராணி மார்கரெட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மாதுளை ஜூஸை வழக்கமாக உட்கொள்பவர்களின் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவு குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாதுளை மன அழுத்தத்தை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மன அழுத்தம் உள்ள நாட்களில் மாதுளை பழங்களை சாப்பிடலாம்.

உடலின் செரிமானத்திற்கு உதவுகிறது

நார்ச்சத்து உடலில் செரிமானத்திற்கு அதிகமாக உதவுகிறது. மாதுளை அதிக நார்ச்சத்து நிறைந்த பழமாக உள்ளது. இதனால் மாதுளை செரிமான அமைப்பு ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.எனவே மாதுளையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாது.

இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக சில ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பைட்டோ தெரபி ரிசர்ச் என்ற இதழ் வெளியிட்ட ஆய்வில், பங்கேற்பாளர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தினமும் 150 மில்லி மாதுளை சாறை குடித்தனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது. இதய ஆரோக்கியத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். உயர் இரத்த அழுத்தமானது மாரடைப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்களும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

நினைவு திறன் அதிகரிக்க

நினைவு திறன் என்பது சிலருக்கு மோசமானதாக உள்ளது. சின்ன சின்ன பொருட்களை மறந்து விடுவது பிரச்சனை இல்ல ஆனால் அலுவகத்தில் வேலை பார்ப்பவர்கள் முக்கியமான பொருள் ஒன்றை மறந்துவிட்டால் அது மோசமானதாகும். எனவே தினமும் மாதுளை சாப்பிட்டு வர நினைவு திறன் அதிகரிக்கும்.

Latest Slideshows

Leave a Reply