Heavy Rains in June: 27 ஆண்டுக்கு பிறகு June மாதத்தில் சென்னையில் கன மழை  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1996க்கு பிறகு இப்போது 2023ல் சுமார்   27  ஆண்டுக பிறகு June மாதத்தில் கன மழை  பெய்துள்ளது. கடலில் இருந்து நகரும் மேகங்களிலிருந்து இந்த  கன மழை பெய்துள்ளது.   இயற்கை ஆனது வரலாறு காணாத வெப்பத்துக்குப் பிறகு இதுபோன்ற மழையை கொண்டு ஈடுசெய்கிறது.

வட தமிழகத்தை மையமாக வைத்து இடியுடன் கூடிய மழை 19/06/2023 இன்று மீண்டும் பெய்யும்.  மற்றொரு தீவிர மழையை சென்னையின் கிழக்கே வீசும் புதிய புயல்கள் சற்று இளைப்பாறுவதற்கு முன் கொடுக்க வாய்ப்புள்ளது” என்று சென்னை மழை குறித்து வெளியான மற்றொரு செய்தி தெரிவிக்கிறது.

நேற்று இல்லாத மாற்றம் என்னது?

நேற்று திடீரென சென்னை  ஊட்டி, ஏற்காடு போல சென்னை மாறியது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக .100 டிகிரி தாண்டி வாட்டி வதைத்துக் கொண்டு இருந்த வெப்பம் நேற்று திடீரென மாறியது. வெயிலின் தாக்கம் ஆனது அக்கினி நட்சத்திர காலம் முடிந்த போதும் ரண கொடூரமாக இருந்தது.

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூட மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்று  19/06/2023  இந்த ஆறிவிப்பை தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் நல்ல மழை பெய்து கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply