Helicopter Service Soon In TN : தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம்

Helicopter Service Soon In TN :

தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவையை விரைவில் அறிமுகப்படுத்தத் TIDCO (Tamil Nadu Industrial Development Corporation) திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி (Helicopter Service Soon In TN) உள்ளது. TIDCO – நிர்வாக இயக்குநர், சந்தீப் நந்தூரி இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். திமுக அரசு தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. குறிப்பாக இந்த சேவை தமிழகத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையிலும் மற்றும் தமிழகத்தை பிற மாநிலங்களோடு இணைக்கும் வகையிலும் தொடங்கப்பட இருக்கின்றது. தமிழக அரசு ஆனது இது குறித்த அரசாணையை விரைவில் வெளியிட உள்ளது. இந்த ஹெலிகாப்டர் சேவைத் திட்டம் ஆனது பல்வேறு அரசு நிறுவனங்கள், ஹெலிபேட் மற்றும் ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஹெலிகாப்டர் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் 80 இடங்களில் உள்ள ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகளை புதுப்பித்து வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய இடங்களை அடையாளம் கண்டு அங்கு ஹெலிபேடுகளை அமைக்கவும் TIDCO முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடையும் பட்சத்தில் தமிழ்நாட்டின் நகரங்களுக்கு இடையிலான ஹெலிகாப்டர் சேவை (Helicopter Service Soon In TN) அறிமுகப்படுத்தப்படும். ஹெலி திஷா மற்றும் ஹெலி சேவா ஆகியவற்றின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் :

தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கும் இந்த ஹெலிகாப்டர் சேவையை (Helicopter Service Soon In TN) சாமானியர் முதல் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், விஐபி-க்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் நோக்கிலேயே Tamil Nadu Industrial Development Corporation ஆனது மாநிலத்தில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

தமிழகத்தில் ஹெலிகாப்டர் சேவையின் முக்கியத்துவம் :

  • நகரங்களை இணைப்பது மட்டுமல்லாமல் அந்தந்த நகரங்களின் பொருளாதாரமும் மேம்படும்.
  • உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும்.
  • சாமானியர்களால் மலிவு விலையில் இந்த சேவையில் பறக்க முடியும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
  • அவசர மருத்துவ சேவைகள் மற்றும் உடல் உறுப்புகளை நகரங்களுக்கு இடையே விரைந்து எடுத்துச் செல்ல முடியும்.
  • சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்படும்.
  • சுற்றுலா, நோக்கத்திற்காக பயன்படும்.
  • தமிழகத்தில் உள்ள தொலைதூரப் பகுதிகளை விரைந்து சென்றடைய  முடியும்.  பலமடங்கு நேரம் மிச்சமாகும்.
  • நகரங்களை இணைப்பது மட்டுமல்ல அந்தந்த நகரங்களின் பொருளாதாரமும் மேம்படும்.

பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல உள்ள கார், பஸ், ரயில், விமானம் போன்ற போக்குவரத்து வாகனங்கள் லிஸ்டில் ஹெலிகாப்டரும் இணைய இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply