Hi Nanna Movie Review : 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் திரை விமர்சனம்

Hi Nanna Movie Review : தசரா திரைப்படத்தில் பிளாக் மேக்கப் போட்டுக் கொண்டு ஆக்ரோஷமாக நடித்த நானி மீண்டும் தனது ஹோம் கிரவுண்ட் சாக்லேட் பாய் லுக்கில், பொறுப்பான தந்தையாகவும், மனைவியை பிரிந்த கணவராகவும், காதலிக்காக ஏங்கும் காதலனாக என பலவிதமான நடிப்புடன் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார். நானி மற்றும் மிருணாள் தாகூரின் ஹாய் நான்னா ‘டாடா’ திரைப்படத்தின் ரீமேக் இல்லை என்றாலும், அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. தற்போது திரைப்படத்தின் முழு விமர்சனத்தையும் (Hi Nanna Movie Review) பார்க்கலாம்.

'ஹாய் நான்னா' திரைப்படத்தின் மையக்கருத்து :

விராஜ் (நானி) சிறந்த புகைப்படக் கலைஞராக வர வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். அவருக்கும் வர்ஷாவுக்கும் (மிருணாள் தாகூர்) காதல் ஏற்படுகிறது, அந்த காதல் திருமணத்தில் முடிகிறது. இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியே சில காலங்களுக்கு முன் நகர்ந்து செல்கிறது. நானி பிரபல புகைப்படக் கலைஞராக உள்ளார். நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட மகள் மஹியை சிங்கிள் பேரன்ட்டாக வளர்த்து வருகிறார். அப்போது, யஷ்னா குழந்தையைப் பார்த்துக் கொள்ள வருகிறார். வர்ஷாவுக்கு என்ன ஆனது? யார் இந்த யஷ்னா? என்கின்ற ட்விஸ்ட் உடன் ‘ஹாய் நான்னா’ படத்தின் கதை கச்சிதமாக அமைந்துள்ளது.

Hi Nanna Movie Review :

Hi Nanna Movie Review : மிருணாள் தாகூரின் நடிப்பு படம் முழுவதும் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுகிறது. தசரா படத்திற்கு பிறகு நானியின் க்யூட்டான கதாபாத்திரம் பெண் ரசிகர்களை வழக்கம் போல் ஜொள்ளு விட வைத்துள்ளது. மஹி கதாபாத்திரத்தில் மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் கியாரா கன்னாவும் அழகாக நடித்து சில இடங்களில் கண்ணீரை வரவழைக்கும் நடிப்பை வெளிப்படுத்துகிறார். இவர்களைத் தவிர ஸ்ருதிஹாசன் கோவாவில் ஒரு பாடலுக்கு நடனமாடி விட்டு செல்கிறார். நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேடத்தை சரியான அளவில் நடித்து விட்டு சென்றுள்ளனர். படத்தின் முடிவில் கதை மெதுவாக நகர்கிறது. முதல் பாதி போல இரண்டாம் பாதியில் சில இடங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஆனால் மீண்டும் கிளைமேக்ஸ் காட்சிகள் படத்தை தூக்கி விட்டது.

படக்குழு :

குஷியில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹேஷம், இப்படத்திலும் இசை மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவு படம் முழுக்க ரிச் லுக்கை கொடுக்கிறது. பிரவீன் ஆண்டனியின் எடிட்டிங் சூப்பர். இயக்குனர் சவுரவ் காதல், பாசம், குழந்தை வளர்ப்பு என எளிமையான கதையில் ட்விஸ்ட் கலந்து ஒரு ஃபீல் குட் படத்தை கொடுத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply