Highest Paying States in India: இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும்  மாநிலங்களின் பட்டியல்

மக்கள் சொந்த மாநிலத்திலேயே அல்லது ஊரிலே வேலை செய்தால் அதிக சம்பளம் மற்றும் அதிக வருமானம் கிடைக்காது என்ற அடிப்படையில் சொந்த ஊரையும், வீட்டையும், மற்றும் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரிய முற்படுகின்றனர். மேலும் வெளிமாநிலங்களில் மக்கள் வேலை செய்தால் அடிப்படை ஊதியத்தை தவிர, மற்ற கொடுப்பனவுகளும் கிடைக்கும்.  எனவே மக்கள் எப்பொழுதும் எந்த மாநிலத்தில் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்பது பற்றி  தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மண்டலங்கள் அளவில் பார்த்தால் தென்னிந்திய மாநிலங்கள்தான் அதிக வருமானத்தை தருகின்றன. முதல் பத்து மண்டலங்களில் 5 தென்மாநிலங்கள்தான்  முதல் இடம் பெறுகின்றன. இந்திய வருவாயில் தென்னிந்தியாவின் பங்கு முக்கியமானது.

மேலும் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை தென் மாநிலங்கள்தான் அளிக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலாவதாக உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து நம் தமிழகமும் மற்றும் மூன்றாவதாக உத்திரபிரதேசமும் உள்ளது.  அதிக வரி வருமானம் பெறுவதில் மகாராட்டிரம் ஆனது முதலிடத்திலும்  மற்றும் டெல்லி இரண்டாம் இடத்திலும் உள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடைசி இடத்தில் உள்ளது.

Highest Paying States in India - ஒரு குறிப்பு

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் IT மற்றும் செய்தி ஊடகங்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

  • இந்திய நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்ச சராசரி மாதச்சம்பளமாக ரூ.20,730 மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது.
  • இரண்டாவது இடத்தில் உள்ள மேற்கு வங்கத்தில் ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,210 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் வேலைக்கான வாய்ப்புகள் ஆனது குறைவு.
  • மூன்றாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் சராசரி மாத வருமானம் ரூ.20,011 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவில்  தொழிற்சாலைகள் தவிர, மில்லியன் கணக்கான மக்களுக்கு நல்ல வருமானம் தரும் திரைப்படத் துறை உள்ளது.
  • நான்காம் இடத்தில் உள்ள பீகாரில் சராசரி மாத வருமானம் ரூ.19,960 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பீகாரில் தொழில் இல்லாததால், இங்குள்ள பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தை விட்டு வெளியூர் சென்று வேலை பார்க்கின்றனர்.
  • 5-வது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் சராசரி மாத வருமானம் ரூ.19,740 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 6-வது இடத்தில் உள்ள  மத்தியப்பிரதேசத்தில்  சராசரி மாத வருமானம் ராஜஸ்தானைப் போலவே ரூ.19,740 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில் சராசரி மாத வருமானம் ரூ.19,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு நல்ல பெயர் பெற்றது ஆகும்.
  • 8-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் சராசரி மாத வருமானம் ரூ.19,150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 9-வது இடத்தில் உள்ள குஜராத்தில் சராசரி மாத வருமானம் ரூ.18,880  ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 10-வது இடத்தில் உள்ள  ஒடிசாவில்  சராசரி மாத வருமானம் ரூ.18,790- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 11-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் சராசரி மாத வருமானம் ரூ.18,520- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளா 13-வது இடத்திலும், பஞ்சாப் 14-வது இடத்திலும், ஹரியானா 17-வது இடத்திலும் உள்ளன. மேலும் டெல்லி ஆனது இந்த பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது.. கடைசி இடத்தில் இருப்பது அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும்.

பெங்களூரூ மற்றும் நொய்டாவில் வாழ்வாதாரத்திற்கான செலவுகள் அதிகம் என்பதால், அடிப்படை சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் ஆனது அதிகமாக வழங்கப்படுகிறது. எனவே இந்தியாவில்  வெளிமாநிலத்தில் பணிபுரிய ஆசைப்படும் பலரின் தேர்வு பெங்களூரூ மற்றும் நொய்டாவாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply