Hitler Teaser : 'ஹிட்லர்' படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் (Hitler Teaser) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள விஜய் ஆண்டனி தனித்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் தான் ‘ஹிட்லர்’. இயக்குனர் தனா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார், இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் பான்-இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படத்தை செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்த ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியீட்டு (Hitler Teaser) ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது.

Hitler Teaser :

ஹிட்லர் படத்தின் டீசரை (Hitler Teaser) நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். டீசரைப் பகிர்ந்துள்ள ஜெயம் ரவி, “டீசரை வெளியிட்டதில் மகிழ்ச்சி, ஒரு சுவாரஸ்யமான தனித்துவமான ஆக்ஷன் உள்ளடக்கம் போல் தெரிகிறது” என்று ஜெயம்ரவி பகிர்ந்துள்ளார். ஒரு நிமிடத்துக்கும் மேலான டீசர், விஜய் ஆண்டனி ஊழல் மற்றும் குற்றங்களால் சாமானிய மக்கள் படும் துயரங்களைக் காட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பிரபல தென்னிந்திய நடிகர் சரண்ராஜ் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியாக நடிக்கிறார், மேலும் கௌதம் மேனன் ஒரு கடினமான போலீஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். ஹிட்லர் டீசர் (Hitler Teaser) முக்கியமாக விஜய் ஆண்டனி மற்றும் கௌதம் மேனன் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் முன் துரத்தலில் ஈடுபடுவதைச் சுற்றி வருகிறது. படம் ஏராளமான ஆக்‌ஷன் நிறைந்ததாக இருக்கும் என்றும், க்ரைம் த்ரில்லர் வகை ரசிகர்களுக்கு ஆர்வமூட்டுவதாகவும் காட்சிகள் காட்டுகின்றன. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக இருக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் (Hitler Teaser) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply