Hitlist Teaser : சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் டீசர் வெளியீடு...

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சூர்யகதிர் மற்றும் கே.கார்த்திகேயன் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளனர். இப்படத்தில் சரத்குமார், விஜய் கனிஷ்கா, முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் டீசரை (Hitlist Teaser) தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Hitlist Teaser :

இந்த படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ‘சிங்கமோ, திமிங்கலமோ வேட்டையாடும் வீட்டைக்காரனை பாத்துதான் மிருகங்கள் பயப்படணும்’ என்ற கம்பிரமான குரலில் இன்ட்ரோ கொடுக்கிறார் சரத்குமார். சமுத்திரக்கனி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் என அடுத்தடுத்த நடிகர்களின் எதிர்வினைகளை வெளிப்படுத்தும் வகையில் டீசர் பரபரப்பாக ஓடுகிறது.

சைக்கோ கொலையாளியைத் தேடும் போலீஸ் என்ற ஜானரியில் இப்போதுதான் ‘போர் தொழில்’ திரைப்படத்தை இப்போதுதான் பார்த்தோம். குறிப்பாக சரத்குமார் அதிலும் காவலராக தான் நடித்துள்ளார். அப்படி இருக்க, அதே டிரைலர் என்ற முடிவுக்கு வந்து விட முடியாது. இருப்பினும், பெரும்பாலான க்ரைம் த்ரில்லரின் ஒன்லைன் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் தனித்துவமான திரைக்கதை மட்டுமே படத்தை தனித்து நிற்க வைக்கும். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மாறாக ‘சூட்டிங் சூன்’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்த சூட்டிங் எந்த மாதிரியான சூட்டிங் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply