HMPV Virus Spreading In China : சீனாவில் ஹெச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருகிறது

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து எந்தவொரு நாடும் தப்பவில்லை. இதன் பாதிப்பில் இருந்து உலகம் மொத்தமாக இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் ஹெச்எம்பிவி எனும் புதிய வைரஸ் (HMPV Virus Spreading In China) வேகமாக பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் புதிய வைரஸ் பரவி வருகிறது (HMPV Virus Spreading In China)

ஹூயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் என்பது நியூமோவிரிடே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த RNA வைரஸாகும். இது ஏவியன் மெட்டாப்நியூமோ வைரஸ் துணைக்குழுவுடன் நெருங்கிய தொடர்புடைய (HMPV Virus Spreading In China) வைரஸாகும். இந்த வைரஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் அறியப்படாத வைரஸ்களால் ஏற்படும் சுவாச தொற்று உள்ள குழந்தைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து தான் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவில் கடந்த சில வாரங்களாக மக்களுக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதை கண்காணிக்க சீனா நோய்கள் கட்டுப்பாட்டு வாரியம் பைலட் கண்காணிப்பு எனும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் ஹெச்எம்பிவி வைரஸ் காரணமாகவே நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தது. மேலும் வரும் காலங்களில் இந்த சுவாச நோய்களின் பாதிப்புகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள்

இந்த ஹெச்எம்பிவி வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், மூக்கடைப்பு, உடல் சோர்வு, பலவீனம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறியாக (HMPV Virus Spreading In China) இருப்பதாக சீனா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு அல்லது எம்பிஸிமா போன்ற பாதிப்புகள் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இந்த வைரஸ் தும்மல் அல்லது இருமலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகவும், இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பது அதன் மூலமாகவும் பரவுவதாக சீனா மருத்துவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி இல்லை

இந்த ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 3 முதல் 5 நாட்களில் அதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் என்றும் சீன அதிகாரிகள் (HMPV Virus Spreading In China) தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை இந்த ஹெச்எம்பிவி வைரஸுக்கு தடுப்பூசி மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிவது, மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply