Honda Elevate Car - இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Honda Car ஜப்பானில் அறிமுகமானது
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானில் அறிமுகமான Honda Elevate Car-ன் சிறப்பம்சங்கள் :
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹோண்டாவின் Honda Elevate Car ஜப்பானில் 2024இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் Auto Salon 2024 நிகழ்ச்சியில் Honda நிறுவனத்தின் புதிய Honda Elevate Car காட்சிப்படுத்தப்பட்டது. இது ஒரு புதுமையான ஆப் ரோடிங் வகை மாடல் Car ஆகும் (Compact SUV Car). வாடிக்கையாளர்களின் Versatile Life Style-லை வைத்து இந்த புதிய Honda Elevate Car உருவாக்கப்பட்டுள்ளதாக Honda நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் இந்த Honda Elevate Car ஆனது WR-V என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. Honda Elevate Car ஆனது Honda நிறுவனத்திற்கு ஒரு திருப்புமுனையாக உள்ளது. Honda Elevate Car ஆனது நவீன பாதுகாப்பு வசதிகளுடன் வெளியாகியுள்ளது.
Highlights Of Honda Elevate Car :
- 5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி கொண்டுள்ளது. புதிய வகை இன்போடைன்மெண்ட் சிஸ்டம், CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் போன்றவற்றை கொண்டுள்ளது.
- Level 2 ADAS – Honda Sensing பாதுகாப்பு வசதி உள்ளது.
- முற்றிலும் கருப்பு நிற இன்டீரியரை பெற்றுள்ளது.
- Grille முழுவதும் ஆல் பிளாக், 3 பைலட் லைட், மஞ்சள் நிற போக் லைட், பிளாக் கிளாடிங் உள்ள பம்பர், மஸ்குலர் லுக் உள்ளது.
- Headlamp பிளாக் மற்றும் கிரோம் பினிஷ் கொண்டுள்ளது.
- Dashboard-ல் உள்ள Leather Accents தவிர்க்கப்பட்டுள்ளன.
- JDM-ஸ்பெக் மாடல் – இந்தியாவில் காணப்படும் 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டிற்குப் பதிலாக, வலதுபுறத்தில் பட்டன்ஸ் கொண்ட வித்தியாசமான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமை பெறுகிறது. மேலும் Remote Control இந்த காரின் சில செயல்பாடுகளை தொலைவிலிருந்து அணுக யூஸர்களை அனுமதிக்கிறது.
- ADAS அம்சங்கள் – ஹோண்டாவின் லேன்வாட்ச் கேமரா மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப்பிங் சப்போர்ட் சிஸ்டம், ஆட்டோ ஹை பீம், பார்க்கிங் சென்சார்கள் போன்ற ADAS அம்சங்கள் உள்ளன.
- Theft மற்றும் Mischief, Navigation மற்றும் In-Car Wifi ஆகியவற்றிற்கான Honda ALSOK ரஷ் சர்விஸ் உள்ளது.
- இந்திய மாடலில் உள்ள எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் ஜப்பானிய மாடலில் கொடுக்கப்படவில்லை.
- ஜப்பானுக்கான மாடலில் CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட எலிவேட் போன்ற அதே 1.5-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 119 பிஎச்பி பவர் மற்றும் 145 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும் மற்றும் CVT தானியங்கி விருப்பத்துடன் மட்டுமே கிடைக்கும்.
- புதிய Honda Elevate Car-ன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.99 லட்சம் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் இதன் Ex-Showroom விலை ஆனது ரூ.11 லட்சத்தில் துவங்கி ரூ.16 லட்சம் வரை செல்கிறது.
Latest Slideshows
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Box Office : குட் பேட் அக்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்