HONOR 100 Pro : மீண்டும் அதிரடியாக களமிறங்கும் ஹானர்...

ஹானர் (HONOR) நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் HONOR 90 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஹானர் நிறுவனம் விரைவில் ஹானர் 100 ப்ரோ (HONOR 100 Pro) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இணையதளத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் HONOR 100 Pro ஸ்மார்ட்போன் வரும் November மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஹானர் 100 Pro போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இப்போது அறிமுகமான ஹானர் 90 போனை விட மேம்பட்ட சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனின் கசிந்த ஹானர் 100 ப்ரோ போனின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

HONOR 100 Pro-வின் சிறப்பம்சம்

அதாவது ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் 1.5K Display Resolution உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். மேலும் இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HONOR 100 Pro Display

அதாவது ஹானர் 100 Pro போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த Display-வில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 360 Hz டச் சாம்பிளிங் ரேட் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840 Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) வருகிறது.

HONOR 100 Pro Camera

இந்த ஹானர் 100 Pro போனில் 200 MB மெயின் கேமரா + 12MB அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 MB (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. மேலும் இதில் 60MB செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் கூடுதலாக 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது.

HONOR 100 Pro Colors

மிட்நைட் பிளாக் (Midnight Black) டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 வகையான கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது 8GB ரேம் + 256GB மெமரி கொண்ட ஹானர் 100 Pro போனை ரூ.39,999 விலையிலும், 12GB ரேம் + 512GB மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.42,999 விலையிலும் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply