புதிய HONOR X9B 16GB ரேம்யுடன் விற்பனைக்கு வருகிறது

  • Honor  நிறுவனம் சமீபத்தில் தான்  இந்தியாவில் Honor 90 போனை அறிமுகம்  செய்தது. குறிப்பாக இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது உயர்வான விலையில் தரமான அம்சங்களுடன்  வெளிவந்துள்ளதால் மக்கள் நல்ல வரவேற்பு  கிடைத்தது.
  • இந்நிலையில் ஹானர் நிறுவனம் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய  உள்ளது.

HONOR X9B :

  • HONOR X9B என்ற ஸ்மார்ட்போனை  தற்போது அறிமுகம் செய்ய  உள்ளது ஹானர் நிறுவனம். இன்று இந்த போனின் டீசர் ஆனது மலேசியாவில்  வெளியிடப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த HONOR X9B ஸ்மார்ட்போன் முதலில்  மலேசியாவில் அறிமுகம் செய்யப்படும். அதன் பிறகு தான் உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

HONOR X9B சிறப்பம்சம் :

  • தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ள இந்த HONOR X9B ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப்பார்க்கலாம்.

1. HONOR X9B Display

ஹானர் X9B டிஸ்பிலே பொறுத்தவரை 6.7-இன்ச் (Amoled) டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 120 ஹெர்ட்ஸ்  ரெஃப்ரெஷ் ரேட் 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும்  சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக குவால்காம்  ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் X9B அறிமுகமாகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் எனவும் ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேஜிக் ஒஎஸ் 7.1 (Magic OS 7.1) சார்ந்த ஆண்ட்ராய்டு OS 13 இயங்குதள வசதியுடன் இந்த புது ஹானர் போன் அறிமுகமாகும்.

2. HONOR X9B Storage

16GB Ram மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு  ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3. HONOR X9B Camera

  • 108MB பிரைமரி கேமரா + 2MB  மேக்ரோ லென்ஸ் + 2MB டெப்த சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்த புதிய Honor போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 50MB கேமராவுடன் இந்த அசத்தலான ஹானர் X9B போன் அறிமுகமாகிறது. இதுதவிர LED  பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4. HONOR X9B Battery

  • 40 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000 mAh பேட்டரியுடன் இந்த ஹானர் X9B போன் அறிமுகமாகிறது. எனவே இந்த ஹானர் X9B போனை வாங்கும்  பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

  • அதாவது இந்த போன் நீண்ட நேரம்  பேட்டரி பேக்கப் வழங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்  இந்த போனை அரைமணி நேரத்தில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5. HONOR X9B Speaker

  • Hi-Res ஆடியோ ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 5G டூயல் சிம், வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி  ஆதரவுகளுடன் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. 

  • மேலும் இந்த அசத்தலான ஹானர் எக்ஸ்9பி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் அதிக  எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply