Hot Spot Movie Review : ஹாட் ஸ்பாட் திரைப்படத்தின் திரைவிமர்சனம்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஹாட் ஸ்பாட் படத்தின் விமர்சனத்தை (Hot Spot Movie Review) தற்போது காணலாம். விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் திரைப்படம் மார்ச் 29ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படம் மொத்தம் இரண்டு மணி நேரம் ரன்னிங் டைம் ஆகும். இது மொத்தம் நான்கு தனித்தனி கதைகளுடன் நகர்கிறது. நான்கு கதைகளும் தனித்தனியானவை.
அதாவது ஒரு கதை முடிந்ததும் அடுத்த கதை ஆரம்பிக்கிறது. ஹேப்பி மேரீட் லைஃப், கோல்டன் ரூல்ஸ், தக்காளிச் சட்னி மற்றும் ஃபேம் கேம் என்று நான்கு கதைகளுக்குப் பெயரிட்டார். இதைப் பார்க்கும்போது குறும்படங்களைப் பார்ப்பது போல் இருக்கும் அதே வேளையில், ஒவ்வொரு கதையையும் தெளிவாக, ஆழமாக ரசிகர்களின் மனதில் பதிய வைக்க இயக்குநர் முயற்சி செய்திருப்பது ஒவ்வொரு கதையிலும் தெரிகிறது. இக்கதைகள் இணையாமல் போனது ரசிகர்களுக்கு படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறதா என்று கேட்டால், கேள்விக்குறிதான்.
ஹாட் ஸ்பாட் திரைவிமர்சனம்(Hot Spot Movie Review)
- முதல் கதை, படித்த மற்றும் ஓரளவு முன்னோக்கு சிந்தனை கொண்ட காதலர்கள் தங்கள் காதலை திருமணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த என்ன செய்கிறார்கள் என்பதை விவரிக்கிறது. ஆனால் இந்தக் கதைக்கு ஒரு முன்னுரை உள்ளது. கனவில் நடப்பதாகக் காட்டினாலும், முன்கதை ஏற்படுத்தும் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்திருக்கும்.
- இரண்டாவது கதையில் காதலர்கள் தங்கள் காதல் திருமணத்தை நோக்கி நகரும்போது ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் மையமாக வைத்துள்ளது. படத்தின் ட்ரெய்லரில் இருந்த காட்சிகள் படத்தில் இல்லாதது, இயக்குனரின் பார்வையை ரசிகர்களுக்கு கடத்தமுடியாமல் போயுள்ளது.
- மூன்றாவது கதை ஆண் பாலியல் தொழிலாளியை மையமாகக் கொண்டுள்ளது. அவர் தனது தொழிலையும் காதலையும் எப்படிக் கையாள்கிறார் என்பது பற்றியும் அவருக்கும் காதலிக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் பேசுகிறது. தக்காளி சட்னி என்று பெயரிடப்பட்ட இந்த பகுதி, உறுதியான காதலர்கள் எப்படி காதலில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறது.
- நான்காவது கதை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் எப்படி நடத்தப்படுகின்றனர். இதனால் குடும்பத்தினர் மத்தியிலும் ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர்கள் மத்தியில் குழந்தை எதிர்கொள்ளும் கேள்விகள், நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை காட்சிப்படுத்தியுள்ளது.
நான்கு கதைகளிலும் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். கலையரசன், ஜனனி ஐயர், சுபாஷ், ஆதித்யா பாஸ்கர் ஆகியோருக்கு சிறப்புப் பாராட்டு. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு ஓ.கே.ரகம். கவனம் ஈர்க்கும் மற்றும் திரைக்கு ஏற்ப இசைமைத்துள்ள சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் கூட்டணிக்கு பாராட்டுக்கள். மொத்தத்தில் நான்கு கதைகளும் மக்கள் மனதில், “இதுல என்ன இருக்கு, இதுல என்ன தப்பு, இது சரி தானே, ஊருடன் ஒத்துவாழ்” என இருப்பதால் நம்மையறியாமல் நாம் செய்யும் தவறுகளை நான்கு கதைகளும் சுட்டிக் காட்டுகின்றன. இதனால் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Latest Slideshows
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்