How To Apply For Changes Patta Online : ஆன்லைன் மூலமாக பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி?

புதிதாக சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன்னுடைய பெயருக்கோ அல்லது தன்னுடைய உறவினர் பெயருக்கோ பத்திரப்பதிவு செய்தவுடன் அந்த சொத்தின் பட்டாவை மாற்றம் செய்வது அவசியமாகும். அந்த வகையில் தமிழகத்தில் பட்டா மாற்றம் செய்வது (How To Apply For Changes Patta Online) என்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. அதாவது நமது கையில் இருக்கும் போன் வாயிலாகவே பட்டா மாறுதலுக்கு எளிமையாக விண்ணப்பம் செய்ய முடியும். இதற்காக தமிழக அரசு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. பட்டா மாறுதலுக்கு முதலில் இந்த இணையதளத்திற்கு சென்று “பட்டா மாறுதல்” என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி? (How To Apply For Changes Patta Online)

பிறகு இந்த வலைத்தளத்தில் உங்கள் செல்போன் எண் கேட்கும், அதனை வழங்கியவுடன் உங்கள் போனுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும் உடனே அதனை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு இதில் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா (How To Apply For Changes Patta Online) அல்லது உட்பிரிவற்ற பட்டா மாற்றம் செய்யவேண்டுமா என இரண்டு பிரிவுகள் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு எது தேவையோ அதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு இந்த சேவைக்காக விண்ணப்ப கட்டணம் ரூ.60 செலுத்த சம்மதம் என்பதை கிளிக் செய்தவுடன் உங்களின் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பதை காண்பிக்கும்.            

மேலும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்ய பொதுமக்கள் இ-சேவை மையங்களையோ அல்லது அரசு அலுவலகங்களையோ தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல் அரசு விடுமுறை நாட்களிலும் கூட பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். இதுமட்டுமல்லாமல் பட்டா மாறுதல் தொடர்பான ஆவணங்களையும் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யலாம். இதற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பட்டா மாறுதல் (How To Apply For Changes Patta Online) விண்ணப்பம் செய்பவர்கள் பாகப்பிரிவினை பத்திரம், தான பத்திரம், கிரைய பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து 3 எம்பிக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த இணையதள பக்கத்திலேயே மீண்டும் பட்டாவை சரிபார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply