How to Buy a Free House Patta : இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது எப்படி?

தமிழகத்தில் எதன் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியாளர் (District Collector) இலவச வீட்டு மனை பட்டா வழங்குவார் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? எத்தனை சென்ட் இடத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா (How to Buy a Free House Patta) கிடைக்கும் அதற்கான வருமான உச்ச வரம்பு என்ன? இலவசமாக வீட்டு மனை பட்டா வாங்கியவர்கள் வேறு யாருக்காவது பின்னாளில் அந்த இடத்தை விற்க முடியுமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை பார்க்கலாம் வாருங்கள்.

How to Buy a Free House Patta - இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் :

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 2006-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத இடம், நீர் நிலைகள் அல்லாத நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசிப்பவர்களுக்கு 3 சென்ட் வரை தமிழக அரசு இலவச மனை பட்டா வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வரை 4.37 லட்சம் பேருக்கு வருவாய் துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.

இலவச வீட்டு மனை பட்டா பெற தேவையான தகுதிகள் :

ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்கள் இலவச வீட்டு மனை பட்டா (How to Buy a Free House Patta) பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் இலவச வீட்டு மனை பட்டா பெற விண்ணப்பிப்பவர்கள் பெயரில் எந்த வீட்டு மனையும் இருக்கக்கூடாது. மேலும் அவரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான எல்லா நகல் ஆவணங்களும் அவரின் பெயரில் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கோட்டா முறையில் பெற்ற சாதி சான்று, வருமானச்சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்பட அனைத்து விவரங்களையும் விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும். எந்த பகுதியில் குடியிருப்புக்கு ஏற்ற அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது என்பதை அறிந்து அந்த பகுதியை விண்ணப்பித்தில் குறிப்பிட்டு மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கலாம்.

எத்தனை சென்ட் நிலம் கிடைக்கும் :

சென்னை போன்ற மாநகர பகுதியில் 1 1/4 அல்லது 1 1/2 சென்ட் இடமும், கிராம புறப்பகுதி எனில் 2 அல்லது 2 1/2  சென்ட் இடம் நிபந்தனை பேரில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 3 சென்ட் இடம் வரை கிடைக்கக்கூடும். மேலும் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்கும் இடம் நத்தம் புறம்போக்கு நிலமாக இருக்கும்.

இலவச வீட்டு மனை பட்டா வாங்கியவர்கள் அந்த இடத்தை விற்க முடியுமா?

இலவசமாக வீட்டு மனை பட்டா வாங்கியவர்கள் பெரும்பாலும் வேறு யாருக்கும் அந்த இடத்தை பின்னாளில் விற்க முடியாது. பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியபோது இத்தனை வருடம் கழித்து விற்கலாம் என குறிப்பிட்டிருந்தால் அதற்கு பிறகு விற்க முடியும்.

Latest Slideshows

Leave a Reply