How To Buy Sealing Strap : நிபந்தனை பட்டா வழங்கப்பட்ட நிலத்திற்கு சீலிங் பட்டா வாங்குவது எப்படி?

அரசாங்கம் நிபந்தனைவுடன் பட்டா வழங்கப்பட்ட நிலத்திற்கு சீலிங் (Sealing) பட்டா (How To Buy Sealing Strap) வாங்குவது எப்படி? அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அரசாங்கம் இலவசமாக பட்டா அல்லது சலுகை விலையில் பட்டா வழங்கும் போது அந்த பட்டாவில் சில நிபந்தனைகளை குறிப்பிட்டு வழங்கும். இலவசமாக பட்டாவை பெற்ற பயனாளிகளும் அதனை சார்ந்தவர்களும் அந்த நிபந்தனைகளுக்கு கட்டாயமாக கட்டுப்பட வேண்டும்.    

இலவசமாக வழங்கப்பட்ட பட்டாவில் 7 ஆண்டுகள் அல்லது 14 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகள் வரை (How To Buy Sealing Strap) சொத்தின் பட்டா மீது வில்லங்கம் (உரிமை மாற்றம்) செய்யக் கூடாது என நிபந்தனை இருக்கும். இந்த நிபந்தனை காலம் முடியும் வரை இலவச பட்டா பெற்றவர் அந்த சொத்தினை வில்லங்கம் செய்யாமல் நிலத்தை அனுபவித்து வரவேண்டும். பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவை சார்ந்தவர்கள் இலவச பட்டா பெற்ற சொத்தினை அவசர தேவைக்காக விற்க கூடாது.   

இவர்களின் வறுமையை பயன்படுத்தி பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் இந்த சொத்தை அபகரித்து விட கூடாது என்பதற்காக அரசு (How To Buy Sealing Strap) சில நிபந்தனைகளை விதிக்கிறது. மேலும் நிபந்தனைக் காலம் முழுவதும் முடிந்த பிறகு முழு சொத்துரிமையை பயனாளி அடைகிறார்.

How To Buy Sealing Strap

குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பட்டா சொத்தில் முதலில் வீடு கட்ட வேண்டும். மேலும் பட்டியல் இன வகுப்பைச் சார்ந்தவர்களை தவிர மற்றவர்களுக்கு உரிமை மாற்றம் செய்ய கூடாது. அதுமட்டுமல்லாமல் விவசாய நிலத்திற்கு வழங்கும் பட்டாவில் கட்டாயமாக அங்கு விவசாயம் செய்யவேண்டும். இவை அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோர் பட்டாவில் விதி மீறல் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்காணித்து வருவார்கள். விதி மீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றால் அரசாங்கத்திற்கு சீலிங் (Sealing)  பட்டா (How To Buy Sealing Strap) வழங்க பரிந்துரை செய்வார்கள். மேலும் பட்டாவில் நிபந்தனையை மீறி இருந்தால் பட்டாவை அரசு ரத்து செய்துவிட்டு சொத்தினை கைப்பற்றிக் கொள்ளும்.

Latest Slideshows

Leave a Reply