How to Link Aadhaar Card And Voter ID Card : போலி வாக்குப்பதிவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தேர்தல் ஆணையம் ஆனது தற்போது போலி வாக்குப்பதிவை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்திய நாட்டில் நடைபெற உள்ள Lok Sabha Election

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டனர். இந்திய நாட்டில் உள்ள  26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  Lok Sabha தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆனது அமலுக்கு வந்துள்ளன. தற்போது போலி வாக்குப்பதிவை தடுக்க, தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. பயனர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் செயல் முறை (How to Link Aadhaar Card And Voter ID Card )

  • வாக்காளர் சேவை இணையதளத்திற்குச் சென்று, ‘படிவம்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால், மொபைல் எண், பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உள்நுழை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட பயனராக இல்லாவிட்டால், ‘Signup’ விருப்பத்தைக் கிளிக் செய்வதன் மூலம் விவரங்களை நிரப்பி செயல்முறையை முடித்து பதிவுபெற வேண்டும். 
  • பதிவுசெய்த பிறகு, பயனரது மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
  • பதிவு செய்த பிறகு, ‘படிவம் 6B’ ஆனது பயனர் முன் திறக்கப்படும். இப்போது பயனர்  தனது சட்டமன்ற/நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதற்குப் பிறகு, பயனர் தங்கள் விவரங்கள், OTP, ஆதார் எண்ணை உள்ளிட்டு சமர்ப்பி (submit) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இறுதியாக பயனர் தங்கள் விண்ணப்பத்தை டிராக் செய்து கொள்ளலாம்.

தொலைபேசி மற்றும் SMS மூலம் இணைக்கும் செயல் முறை

  • தொலைபேசி மூலம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க விரும்பும்  பயனர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வோட்டர் ஐடி மற்றும் ஆதார் அட்டையை இணைக்கலாம்.
  • பயனர்கள் மெசேஜ் மூலம் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை இணைக்க விரும்பினால், 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பி இணைத்துக் கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply