Huawei Mate XT Tri Fold : ஹுவாய் Mate XT ட்ரை ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகப்படுத்திய பிறகு, சில மணிநேரங்களில் ஹுவாய் நிறுவனம் உலகின் முதல் மூன்றாக மடிக்கக்கூடிய ஹுவாய் Mate XT ஸ்மார்ட்போனை (Huawei Mate XT Tri Fold) அறிமுகம் செய்துள்ளது. 

Huawei Mate XT Tri Fold :

Mate XT ஸ்மார்ட்போனின் திரையை முழுமையாக விரித்தால் 10.2 அங்குலம் கொண்ட பெரிய திரையாக மாறுவது இதன் சிறப்பு அம்சமாக உள்ளது. மேலும், திரையை ஒருமுறை மடக்கினால், அது 7.9 அங்குல திரையாக மாறும். இரண்டாவது முறையாக மடிக்கும் போது நாம் வழக்கமாக பயன்படுத்தும் 6.4 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போனாக மாறுவது சிறப்பம்சமாகும். இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்களை பயன்படுத்தும் வசதி உள்ளது. சேமிப்புத் திறனைப் பொறுத்தவரை, இது 256 GB, 512 GB மற்றும் 1TB என 3 வகைகளில் கிடைக்கும் என்று ஹுவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் கொண்ட 50 மெகா பிக்சல் கேமரா, 12 மெகா பிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 12 மெகா பிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. மேலும், வீடியோ அழைப்பிற்காக திரையின் முன்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மடிக்கக்கூடிய Mate XT ஸ்மார்ட்போன் (Huawei Mate XT Tri Fold) செப்டம்பர் 20 அன்று சீனாவில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை தோராயமாக ரூ.2,35,500/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply