Nita Ambani-க்கு Humanitarian Award - Miss World Foundation அங்கீகாரம்

Nita Ambani-க்கு Humanitarian Award :

இந்தியாவில் 2024 உலக அழகிப்போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. நீட்டா அம்பானிக்கு அவரது தொண்டு மற்றும் சேவைகளைப் பாராட்டி, ‘மனிதாபிமான விருது’ (Humanitarian Award) ஆனது வழங்கப்பட்டது.

மிஸ் வேர்ல்டு அறக்கட்டளையின் சார்பாக இந்த விருதினை மிஸ் வேர்ல்டு அமைப்பின் தலைவர் மற்றும் CEO ஜூலியா மோர்லி வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய CEO ஜூலியா மோர்லி, “உலகம் முழுவதும் நீட்டா அம்பானி இரக்கத்திற்காக அறியப்பட்டவராக இருக்கிறார். நீட்டா அம்பானியின் செயல்பாடுகள் பாராட்டுதலுக்கு உரியது” என்று தெரிவித்தார்.

நீட்டா அம்பானி உரை :

விருதை பெற்றுக்கொண்ட (Humanitarian Award) நீட்டா அம்பானி கூறுகையில், எனது பயணம் முழுவதும்  சத்தியம், சிவம், சுந்தரம் என்ற காலத்தால் அழியாத இந்தியக் கொள்கைகளால் நான் வழிநடத்தப்பட்டேன். இவை உண்மை, நன்மை மற்றும் அழகு ஆகியவற்றைக் குறிக்கும். சத்தியம் ஆனது உண்மையைப் பின்தொடர்கிறது. சிவம் ஆனது உள்ளத்தில் தெய்வீகத்தை (Divinity) வளர்க்கிறது. இந்த மரியாதை ஆனது எனது தனிப்பட்ட சாதனையல்ல. சுந்தரம் ஆனது நம்மைச் சூழ்ந்திருக்கும் அழகைக் கொண்டாடுகிறது.

எங்களது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலம் கோடிக்கணக்கான குழந்தைகளின் சிரிப்பில் நான் தெய்வீகத்தை அனுபவித்திருக்கிறேன். நம்மைப் பிணைக்கும் கருணை மற்றும் சேவையின் சக்திக்கு இந்த மரியாதை ஆனது ஒரு சான்று ஆகும். இந்த விருதை தனிநபரின் சாதனைக்காக கிடைத்தது அல்ல. கருணையும், இரக்கமும் கொண்ட ஒவ்வொருவரின் சேவைக்கு கிடைத்த விருதாக நான் கருதுகிறேன். நான் கடைபிடித்து வரும் சத்தியம், சிவம், சுந்தரம் என்ற கொள்கைகள் உண்மை, நன்மை மற்றும் அழகு என்பதை குறிக்கிறது. நீங்கள் ஒவ்வொரு கணத்திலும் மகிழ்ச்சியைக் கண்டறிந்து, உங்களது இதயத்தை நன்றியுணர்வு மற்றும் பாராட்டுகளால் நிரப்புங்கள். அழகை நேர்மறை மாற்றத்திற்கான சக்தியாக பயன்படுத்துங்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளையில், குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு கல்வி, சுகாதாரம், விளையாட்டு, வாழ்வாதாரம், கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் முயற்சி செய்கிறோம் என்று பேசினார். அரங்கத்தில் நீட்டா அம்பானியின் இந்த பேச்சுக்கு பாராட்டுகள் குவிந்தன.

Latest Slideshows

Leave a Reply