Hydrogen For Heritage: ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது...

Hydrogen For Heritage :

புவி வெப்பமயமாதலை தடுக்க  உலக நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவும் சுற்று சூழலுக்கு உகந்த வகையில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்துடன் ஹைட்ரஜன் ரயில்களை விரைவில் இயக்கத் திட்டமிட்டுள்ளது.

நீராவி மூலம் இயங்கி வந்த ரயில்கள், இப்போது டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கி வருகின்றன. டீசல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டால் புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது.

இந்திய ரயில்வே ஆனது ‘Hydrogen For Heritage’ திட்டத்தின் கீழ்  35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  ரயில்வே துறையில் புரட்சியை ஏற்படுத்த  ‘Hydrogen For Heritage’ திட்டம் நோக்கமாக உள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் தூய்மையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் :

சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன்  டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை இணைத்து தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.

மாநிலங்கள் அவையில் இந்த திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார்.  வடக்கு ரயில்வேயின் ஜிந்த்-சோனிபட் பிரிவில் ரயில்வே துறை இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஒரு ரயிலுக்கு ரூ.80 கோடியும் மற்றும் தரைவழி உள்கட்டமைப்பிற்காக ரூ.70 கோடியும் செலவாகும் என  ரயில்வே துறை மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டம்,  ரயில்வே துறையின் குறிப்பிடத்தக்க முதலீடாக இருக்கும்.

இந்திய ரயில்வே ரூ.111.83 கோடி மதிப்பிலான முன்னோடி திட்டத்தை தற்போதுள்ள டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU) ரயில்களில், ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தை பொருத்துவதற்காக  வழங்கியுள்ளதாக வைஷ்ணவ் மேலும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களின் அறிமுகம் தூய்மையான பசுமையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களின் அறிமுகம் கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைக்க உதவும் உறுதியான நடைமுறைகளைப் பின்தொடர்வதில் இந்திய ரயில்வே உறுதியாக உள்ளது.

மார்ச் 2024 இல் ஹைட்ரஜன் ரயில் சோதனைகள் தொடங்க உள்ளதாக வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஷோபன் சவுத்ரி உறுதியளித்தார்.

இந்த   ‘Hydrogen For Heritage’  முன்னோடித் திட்டத்தின் வெற்றியானது முழு இரயில்வேத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடும். மேலும் மற்ற தொழில்துறைகளின் எரிசக்தி தீர்வுகளை ஆராய ஊக்குவிக்கும்.

ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்களை இயக்குவதற்கான ஆரம்ப செலவுகள்  அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்று சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருளில் இயங்கும் இந்த ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, திட்டமிடப்பட்ட செலவு குறையும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஹைட்ரஜனை எரிபொருளாக அறிமுகப்படுத்துவது பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும்.

இந்தியாவின் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை ‘Hydrogen For Heritage’ சீரமைக்கும்.

Latest Slideshows

Leave a Reply