Hydrogen Train : இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில் சேவையை விரைவில் துவங்கவுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில் சேவையை விரைவில் (Hydrogen Train) துவங்கவுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை எந்த வழித்தடத்தில் எங்கிருந்து, எங்கு செல்லும் என்ற தகவல்களையும் ரயில்வே நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.

5-வது நாடு இந்தியா

உலகளவில் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், சீனா ஆகிய 4 நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் ஹைட்ரஜன் ரயிலை பயன்படுத்தும் 5-வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயிலை சென்னையை (Hydrogen Train) தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான Integral Coach Factory (ICF) தயாரிக்கிறது.

முதல் ஹைட்ரஜன் இரயில் (Hydrogen Train)

Hydrogen Train - Platform Tamil

ஹைட்ரஜன் ரயில் சேவை என்பது எரிசக்தி ஆதாரமாக பூஜ்ஜிய அளவு கார்பன் உமிழ்வு (Zero Carbon Emission) இலக்குகளை ஆதரிக்கும் பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தின் நன்மைகளை வழங்கும் ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். 2023 முதல் 2024 ஆம் நிதியாண்டில் ரயில்வே அமைச்சகம் ஹைட்ரஜன் எரிபொருள் (Hydrogen Train) அடிப்படையில் 35 ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்க மத்திய பட்ஜெட்டில் ரூ.2800 கோடி நிதியை ஒதுக்கியது. மேலும் 1 ஹைட்ரஜன் ரயிலை உருவாக்க ஏறக்குறைய ரூ.80 கோடி தேவைப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலானது வரும் மார்ச் 31, 2025 இறுதிக்குள் முழுமையாக தயாரிக்கப்படும் என்று ICF பொது மேலாளர் யு.சுப்பா ராவ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.  

உலகில் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஹைட்ரஜன் ரயில்களை விட இந்தியாவில் உருவாக்கப்படும் ஹைட்ரஜன் ரயில் அதீத சக்தி கொண்டது எனவும், அதிக திறன் கொண்ட ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் எஞ்சினை இந்தியா தற்போது தனது சொந்த முயற்சியால் உருவாக்கியுள்ளது எனவும் சுப்பா ராவ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனி, ஸ்வீடன், சீனா ஆகிய நாடுகளில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயிலின் எஞ்சின்கள் (Hydrogen Locomotive Engine) 500 முதல் 600 ஹார்ஸ்பவர் (Horsepower) திறன் கொண்டவை, ஆனால் சென்னையில் தயாரிக்கப்படும் புதிய ஹைட்ரஜன் ரயில் 1200 ஹார்ஸ்பவர் (Horsepower) திறன் கொண்டது (Hydrogen Train) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் ஹைட்ரஜன் ரயிலின் எஞ்சின் உலகில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரஜன் ரயிலின் எஞ்சினை விட இரு மடங்கு சக்தி கொண்டது. மேலும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையானது 89 கி.மீ தூரத்திற்கு ஜிந்த்-சோனிபட் இடையே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply