Investigations in Hydrothermal Sulphide Systems in Ocean : கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide பற்றிய ஆய்வுகள்

கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் Hydrothermal Sulphide படிமங்களை இந்திய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு  வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பு ஆகும். NIOT ஆய்வாளர்கள் சாதித்து காட்டி உள்ளனர். இந்த கண்டுபிடிப்பு ஆனது இந்தியாவின் கடல் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. NIOT ஆய்வாளர்கள் தென் இந்தியப் பெருங்கடலின் சுமார் 15,000 அடி ஆழத்தில், அதாவது கடல் தளத்திலிருந்து 4500 மீட்டர் (சுமார் 15,000 அடி) கீழே புதைந்திருக்கும் கனிமவள படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இதில் பெரும் மதிப்புடைய கனிமங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். Hydrothermal Sulphide படிமங்கங்களில் கோபால்ட், நிக்கல், மாங்கனீசு, தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற மிகவும் மதிப்புமிக்க உலோகங்கள் நிறைந்துள்ளன.

ஹைட்ரோதெர்மல் சல்ஃபைடு என்றால் என்ன?

Investigations in Hydrothermal Sulfide Systems in Ocean - Platform Tamil

கடலுக்கு அடியில் இருக்கும் மலை முகடுகளின் கீழ் உருவாகின்ற எரிமலைக் குழம்புகள், பீறிட்டு ரிட்ஜுகள் வழியாக (மலைகளில் உருவாகும் இடைவெளி) வெளியே வருகின்ற போது, அவை கடல் நீரில் பட்டு ஆவியாகின்றன. இந்த செயல்முறை ஆனது Hydrothermal என்று அழைக்கப்படுகிறது. கடலின் அடிவாரத்தில் உள்ள நிலத்தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பகுதிகளில், கடல் நீர் பாறைகளின் உட்புறத்தில் ஊடுருவி, மிக அதிக வெப்பத்தைப் பெற்று, கனிமங்களுடன் கலந்து, கருப்பு புகை போல வெளியேறுகின்றன. இது “Hydrothermal Vent” அல்லது “பிளாக் ஸ்மோக்கர்” எனப்படுகிறது. கடல் தளத்தில் இந்த வெப்ப நீரோட்டத்தின் காரணமாக, தாதுக்கள் படிந்து, கனிம வளம் நிறைந்த படிமங்கள் உருவாகின்றன. இவையே Hydrothermal Sulphide படிமங்கள் ஆகும்.

NIOT (தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின்) தலைவரும், அறிவியலறிஞர் டி.எஸ்.ரமேஷ் சேதுராமன் கருத்துக்கள்

இந்த Hydrothermal Sulphide படிமங்களில் கோபால்ட், நிக்கல், மாங்கனீசு, தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற மிகவும் மதிப்புமிக்க உலோகங்கள் நிறைந்துள்ளன. NIOT (தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின்) தலைவரும், அறிவியலறிஞர் டி.எஸ்.ரமேஷ் சேதுராமன் ஹைட்ரோதெர்மல் சல்ஃபைடு எப்படி உருவாகிறது? குறித்து ஆராய்ச்சி செய்து, ஆழ்கடலில் கனிமங்கள் உள்ளது. பாலிமெட்டாலிக் நோடுலஸ் (Polymetallic nodules) 5500 மீட்டரில்  உள்ளது.  மீத்தேன் ஹைரேட்ஸ் ஆனது 1500 மீட்டர் முதல் 3 ஆயிரம் மீட்டர் (சுமார் 9,400 அடி) ஆழத்தில் உள்ளது. ஹைட்ரோதெர்மல் சல்ஃபைட்ஸ் (Hydrothermal Sulphide) 3 ஆயிரம் மீட்டர் முதல் ஐந்தாயிரம் மீட்டர் (சுமார் 16,500 அடி) கடல் ஆழத்தில் உள்ளது. ஆழ்கடலில்  உள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு படிமமும் இருக்கும்.

ஹைட்ரோதெர்மல் சல்பைடு (Hydrothermal Sulphide) இரண்டு தட்டுகள் ஆனது விரியும் இடங்களில் (ரிட்ஜ்கள்) நடுக்கடல் முகடுகள் எனப்படும் கடலில் உள்ள மலைத்தொடர்கள் உருவாகின்றன. நில அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களினால் எரிமலைக் குழம்புகள் துளையின் வழியாக மேலே வரும்போது, கடல் நீரின் குளிர்ந்த தன்மையால் அவை ஆவியாகின்றன. அது தான் ஹைட்ரோதெர்மல் (Hydrothermal) செயல்முறை எனப்படுகிறது. அந்த ஆவியானது தாதுக்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த மண்ணுடன் வெளியேறுவதை ‘சுமோக்கர்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதில் இருந்து கடற்பரப்பில் விழுவதே படிமங்களாக சேர்ந்து ஹைட்ரோதெர்மல் சல்ஃபைட்ஸ் (Hydrothermal Sulphide) எனப்படுகிறது. இந்த படிமத்தில் தாமிரம் (காப்பர்), கோபால்ட், நிக்கல், மாங்கனீசு, தங்கம், வெள்ளி போன்ற கனிமங்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், “NCPOR (நேஷனல் சென்டர் ஃபார் போலார் ஒஷன் ஆராய்ச்சி நிறுவனம்) உடன் இணைந்து இந்த ஆய்வுகளை NIOT (தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின்) ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர். டிசம்பர் 2024-இல் ஆளில்லாத வாகனத்தின் மூலம் ஆழ்கடலில் ஆய்வு செய்து இந்த கனிம படிமம் இருப்பதைக் NIOT (தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின்) கண்டுபிடித்துள்ளது. தற்பொழுது எங்கெல்லாம் படிமம் இருக்கிறது என்பதை NIOT கண்டுபிடித்து வருகிறது. இதற்காக கனிமங்களை எடுத்து ஆய்வு செய்த பின்புதான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க முடியும். இந்த  கனிம ஆய்வின் அடுத்த நிலைக்கு 2031 ஆண்டு வரை ஆகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான இந்த  கனிம ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம், இந்த கண்டுபிடிப்பை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்” என்று கூறினார்.

Latest Slideshows

Leave a Reply