Hyperloop Trains - சென்னை To பெங்களூரு 30 நிமிடத்தில்...

30 நிமிடத்தில் சென்னை To பெங்களூரு பறக்கும் ரயில்கள் - Chennai IIT-யின் Hyperloop ஆராய்ச்சி

மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் செல்லும் Hyperloop Trains தொடர்பான ஆராய்ச்சியில் சென்னை IIT ஆனது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 2025 ஆம் ஆண்டு இதற்கான சோதனை பாதையில் உலகளவிலான போட்டி ஆனது நடத்தப்பட உள்ளது என்றும், 2 ஆண்டுகளுக்கு பின்னர் சரக்கு போக்குவரத்திற்காக நாட்டின் முதல் Hyperloop பாதை தயாராகும் என்றும் ETV பாரத்திற்கு அளித்த பேட்டியில் சென்னை IIT இயக்குநர் காமகோடி தெரிவித்து உள்ளார்.

Hyperloop Trains - Hyperloop தொழில்நுட்பத்தின் அடிப்படை

எந்த ஒரு பொருளும் காற்றில்லா வெற்றிடத்தில் பறக்கும் போது, அது காற்றின் தடையை நீக்கி அதிக வேகத்தில் செல்லும். இதுவே Hyperloop தொழில்நுட்பத்தின் அடிப்படை. இதன் காரணமாகத்தான் தண்டவாளங்களில் செல்லும் ரயில்களால் வானில் பறக்கும் விமானங்கள் அளவுக்கு அதிக வேகமாக செல்ல முடிவதில்லை. எந்த ஒரு பொருளும் தரையுடன் உராய்வு இருக்கும் போது அதன் வேகம் ஆனது மட்டுப்படும். ஆனால் அதே நேரத்தில் வானில் பறக்கும் போது இந்த உராய்வினால் ஏற்படும் தடை ஆனது ஏற்பட வாய்ப்பு இல்லை. அதாவது வேகத் தடை நீங்கி செயல்படும். Hyperloop தொழில்நுட்பத்தின் அடிப்படை இதுதான்.

Chennai IIT Avishkar Hyperloop மாணவர்களின் குழு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளது

  • 1960 முதல் இந்த Hyperloop பற்றிய ஆராய்ச்சிகள் பரவலாக இருந்தாலும், 2012ம் ஆண்டு அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இத்தொழில்நுட்பத்தின் புதிய ஆராய்ச்சியை அறிவித்த போதிலும் பயன்பாட்டுக்கும் வரும் அளவுக்கு இத்தொழில்நுட்பம் ஆனது வலுப்பெறவில்லை.
  • இந்த சூழலில்தான் இந்தியாவில் இந்த Hyperloop தொழில்நுட்பத் திட்டத்திற்காக சென்னை IIT-யில் Avishkar Hyperloop என்ற மாணவர்களின் குழு ஆனது ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
  • இந்த குழு ஆனது 11 வகையான படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்றுவரும் 76 மாணவர்களை உள்ளடக்கியதாக அமைந்து உள்ளது. இந்த குழு ஆனது Hyperloop-பின் பல்வேறு கட்டங்களை வடிவமைத்து வருகின்றது. இந்த அவிஷ்கர் குழுவினர் Hyperloop-பின் பாட் எனப்படும் ரயில்பெட்டியை 3 கட்டங்களாக மேம்படுத்தி கருடா என பெயரிட்டுள்ளது.

Hyperloop-பின் மூன்று முக்கிய பகுதிகள்

  1. லூப் – இது குழாய் போன்ற பகுதி, இது ஒரு குறைந்த காற்றழுத்தம் கொண்ட பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  2. பாட் – ரயில்பெட்டி போன்ற வாகனம்.
  3. டெர்மினல் – பெட்டிகள் நிறுத்தும் பகுதி.

இந்த பாட் பயணிப்பதற்கான லூப் பாதை ஆனது சோதனை ஓட்டத்திற்காக 425 மீட்டர் தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதை ஆனது சென்னையை அடுத்த தையூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தையூர் வளாகத்தில் உள்ள இந்த பாதையில் சர்வதேச அளவிலான போட்டி ஆனது 2025ம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply