-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
Exide Energy Partnership To Localise Electric Vehicle Batteries In India - Hyundai And Kia MoU
Hyundai And Kia இந்தியாவில் EV பேட்டரி உற்பத்தியை உள்ளூர் மயமாக்குவதற்காக Exide Energy Solutions Ltd-டன் கூட்டு சேர்ந்துள்ளன :
இந்தியாவில் மின்சார வாகன பேட்டரிகளை உள்ளூர் மயமாக்குவதற்கான ஒப்பந்தத்தில் Hyundai மோட்டார் நிறுவனமும், Kia கார்ப்பரேஷன் நிறுவனமும் (Hyundai And Kia MoU) Exide Energy Solutions Ltd, என்ற இந்திய பேட்டரி நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளன. கொல்கத்தாவை தளமாகக் கொண்ட Exide Energy Solutions ஆனது Exide Industries-ன் ஒரு துணை நிறுவனம் ஆகும். Exide Energy Solutions ஆனது 2022-இல், Lithium-Ion Cell-கள் உற்பத்தித் துறையில் நுழைந்தது. Exide Energy Solutions ஆனது அமில பேட்டரிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்த ஒப்பந்தம் ஆனது தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் நம்யாங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் கையெழுத்தானது.
Hyundai மோட்டார் நிறுவனமும் மற்றும் Kia கார்ப்பரேஷன் நிறுவனமும் (Hyundai And Kia MoU) இந்தியாவில் அதிக மின்சார வாகன மாடல்களை அறிமுகப்படுத்தவும், மற்றும் LFP Cells-களை மையமாகக் கொண்டு தங்கள் EV பேட்டரி உற்பத்தியை உள்ளூர் மயமாக்கவும் திட்டமிட்டுள்ளன. இது இந்திய சந்தைக்கான இந்த 2 நிறுவனகளுடைய EV திட்டங்களின் விரிவாக்கத்துடன் ஒத்துப்போகிறது. ஆகவே இந்த 2 நிறுவனகளும் (Hyundai And Kia MoU) தங்கள் EV பேட்டரி உற்பத்தியை உள்ளூர் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு, குறிப்பாக லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP – Lithium Iron(Fe) Phosphate) செல்கள் மீது கவனம் செலுத்துகின்றன.
இந்த 2 நிறுவனங்களின் (Hyundai And Kia MoU) Exide Energy உடனான இந்த மூலோபாய ஒத்துழைப்பு ஆனது Hyundai மோட்டார் மற்றும் Kia-வின் பிரத்யேக பேட்டரி மேம்பாடு, உற்பத்தி, சப்ளை மற்றும் இந்திய சந்தையில் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. தற்போது இந்திய சந்தையில் Ioniq 5, Kova மற்றும் Kia EV6 ஆகிய எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகிறது. கியா 2023 ஆம் ஆண்டில் சுமார் 500 எலக்ட்ரிக் கார்களை விற்றது. ஹூண்டாய் தற்போது கோனா எலக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5 என இரண்டு மின்சார வாகனங்களை விற்பனை செய்கிறது. கோனா எலக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5, ஹூண்டாய் 2023 ஆம் ஆண்டில் 2,000 யூனிட்டுகளை விற்றது. 2025 ஆம் ஆண்டில் ஹூண்டாய் மோட்டார் அதன் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
Hyundai And Kia MoU - இந்திய சந்தையில் EV கார் சந்தையில் முன்னணியில் இருப்பதே ஹூண்டாய் மோட்டாரது நோக்கம் :
ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா R&D பிரிவுத் தலைவர் Hewan Yang, “ஹூண்டாய் நிறுவனம் 2032 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஐந்து EV மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், 2027 ஆம் ஆண்டிற்குள் EV சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை 430க்கும் அதிகமாக விரிவுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்திய நாட்டிலேயே எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை Sourcing செய்வதன் மூலம் வாகனங்களின் செலவுகளைக் குறைக்க முடியும். இந்திய சந்தையில் EV கார் சந்தையில் முன்னணியில் இருப்பதே எங்களது நோக்கம்” என்று கூறியுள்ளார். ஹூண்டாய் இந்தியாவில் அதன் மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க ₹26,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ளது.
Latest Slideshows
-
Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
-
IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
-
Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
-
5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
-
Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
-
Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்
-
Tnpsc Group 4 Vacancies Increase : குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது
-
Ratan Tata Passed Away : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்