IAF Agniveer Recruitment 2024 : விமானப்படையில் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (IAF Agniveer Recruitment 2024) வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 6 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், வேலைத் தேவையின் அடிப்படையில் பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IAF Agniveer Recruitment 2024 :

பணியிட விவரம் : அக்னி பத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள் அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த வீரர்கள் இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை எனப்படும் முப்படைகளில் மொத்தம் 4 ஆண்டுகள் (IAF Agniveer Recruitment 2024) பணியாற்றுவார்கள். அக்னிபாத் திட்டத்தின் மூலம், 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட 45,000 இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்த பதவிக் காலத்தில் அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு மருத்துவம் மற்றும் காப்பீடு சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித் தகுதி : இதற்கு விண்ணப்பிக்க 10, +2 முறையில் பள்ளிக் கல்வியை முடித்திருக்க வேண்டும். வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். +2 வகுப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது இரண்டு ஆண்டு தொழிற்கல்வி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இந்த பணிக்கு (IAF Agniveer Recruitment 2024) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் 14,600 ரூபாய் வழங்கப்படும். அதன் பிறகு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக ஜி.எஸ்.டி.யுடன் ரூ.550 கட்டணமாக செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ https://agnipathvayu.cdac.in/AV/- என்ற இணையதளத்திற்குச் செல்லவும், முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து தகுதியான விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06/02/2024

Latest Slideshows

Leave a Reply