IAF Recruitment 2024 : இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கான சேர்வதற்கான வேலைவாய்ப்பு, இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (IAF Recruitment 2024) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 06, 2024 வரை விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IAF Recruitment 2024 - பணியிட விவரங்கள் :

பணியிடம் : அக்னிவீர்வாயு பதவிகள்

வயது வரம்பு : இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளில் சேருவதற்கான வயது வரம்பு ஜனவரி 02,2004 முதல் ஜூலை 02,2007 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் பிறந்து 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மத்திய > மாநிலம் > UT உறுப்பினராக பட்டியலிடப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் 10,12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர்) இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற் தகுதி : இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளில் சேர்வதற்கு, உடல் தகுதி குறைந்தபட்ச உயரம் ஆண்களுக்கு 152.5 செ.மீ ஆகவும், பெண்களுக்கு 152 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு சம்பள உயர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பில் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் தேர்வுக்குத் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போது தேர்வுக் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06/02/2024.

Latest Slideshows

Leave a Reply